கட்சி அறிவிப்பதற்குள் டிஸ்சார்ஜ் ஆவாரா ரஜினி..? சற்று முன் வந்த தகவல்..!

Published : Dec 25, 2020, 05:59 PM IST
கட்சி அறிவிப்பதற்குள் டிஸ்சார்ஜ் ஆவாரா ரஜினி..? சற்று முன் வந்த தகவல்..!

சுருக்கம்

ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 2 நாட்களுக்கு சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   

ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 2 நாட்களுக்கு சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அப்பல்லோ நிர்வாகம், “கொரோனா குறித்து எந்த அறிகுறியும் ரஜினிகாந்திற்கு இல்லை. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் சோர்வு தவிற வேறு எந்த பிரச்சினையும் இல்லை. ரஜினிகாந்த் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ரத்த அழுத்தம் சீரான பின்னரே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 2 நாட்களுக்கு சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


 

PREV
click me!

Recommended Stories

CM ஆகும் விஜய்யின் முதல் கையெழுத்து இதுவா? பெண்களுக்கு ஜாக்பாட்.. 6 சிலிண்டர் இலவசம்!
தவெக ஆட்சி அமைக்க முடியாதா? ஆளுநர் வைக்கப்போகும் ட்விஸ்ட்? குஷியில் திமுக.! தமிழ்நாட்டில் நடக்கப்போவது இதுதான்.!