
கர்நாடக சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்ட மன்றத்திற்கு வரும் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் அனல் பறக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாநிலம் முழுவதும் சூறாவளியாக சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதால் அக்கட்சியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது.
அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பா.ஜ.க வுக்கு இத்தேர்தல் வாழ்வா? சாழ்வா? என்ற கவுரவ பிரச்சனையாக உள்ளது. எனவே பா.ஜ.வும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா கர்நாடகத்தில் முகாமிட்டு வெற்றிக்கா ன அனைத்து தில்லாலங்கடி வேலைகளையும் செய்து வரும் நிலையில் பிரதமர் மோடி தனது 5 நாள் பிரச்சார சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் வலிமையாக உள்ள தெற்கு கர்நாடகத்தில் முதல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக சாடினார். எழுதி வைக்காமல் 15 நிமிடம் கூட பேசத் தெரியாதவர் ராகு ல் என்றும் கிண்டல் அடித்தார் மோடி. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான உச்ச கட்ட வார்த்தைப் போருக்கு பஞ்சம் இருக்காது என்பது நிதர்சனம்.