அடுத்த 50 நாட்கள் கழித்து மொத்தமா அழியபோகுது கொரோனா..?? இந்திய விஞ்ஞானி பகீர். ஆனா இது மட்டும் நடக்க கூடாது.

By Ezhilarasan BabuFirst Published Jan 22, 2022, 6:00 PM IST
Highlights

டெல்டா, ஒமைக்ரானுக்கு பிறகு அடுத்து புதிய மாறுபாடுகள் எதுவும் தோன்றவில்லை என்றால், கொரோனா தொற்றின் வீரியம் குறைந்து அது சாதாரண சளி காய்ச்சல் போல மாறும் என சமிரான் பாண்டா கூறியுள்ளார். 

அடுத்த 50 நாட்களில் கொரோனா வைரஸ் அழிந்துவிடும் என்றும், புதிய மாறுபாடு வரவில்லை என்றால் மார்ச் 11 க்குள் தொற்றின் தாக்கம் குறையும் என்றும் இந்திய விஞ்ஞானி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அது தொடர்பாக அவர் ஐந்து காரணங்களையும் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயர்மட்ட விஞ்ஞானி சமீரன் பாண்டா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  ஒமைக்ரானுக்கு பிறகு கொரோனாவின் புதிய மாறுபாடு (பிறழ்வு) ஏற்படவில்லையென்றால் மார்ச் 11ம் தேதிக்குள் இந்த தொற்று நோய் கட்டுக்குள் வரும் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது வைரஸ் தொற்றின் வீரியம் குறையும் என்பதே அதன் பொருளாகும். 

எண்டெமிக் நிலையை அடையும். 

Latest Videos

எண்டெமிக் நிலை என்றால் என்ன.?  நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் CDC ஒரு நோய் அதன் இருப்பு நிரந்தரமாக இருக்கும் போது, அந்த தொற்று பொதுவானதாக இருக்கும் போது, அது உள்ளூர் நிலையில் இருப்பதாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் தொற்று நோயின் தாக்கம் ஒரு சிலருக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே இருக்குமென்றும், அது சாதாரண நிலையை அடைந்து விடும், இதுதவிர மக்கள் அந்த நோயுடன் வாழவும் கற்றுக் கொள்கிறார்கள் என்பதே எண்டெமிக் நிலை எனப்படுகிறது. அதாவது ஒரு சாதாரண சளி காய்ச்சல் போல அது இருக்கும் என கூறப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் வீழ்ச்சி நிலை அடைவதற்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றாக பார்க்கலாம்

1. ஓமிக்ரோன் தீவிரமானது அல்ல என்று மைல்ட் மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிட்டட் இன் டாக்டர் நிரஞ்சன் பாட்டில் கூறியுள்ளார். இந்த வைரஸால் நுரையீரலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை, இதனால் நிமோனியா, ஆக்சிஜன் பற்றாக்குறை அல்லது ஐசியுவில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையும் இல்லை, 85 முதல் 90 சதவீதம் ஒமைக்ரான் தொற்றுகளால் நோயாளிகளுக்கு எந்த அறிகுறியும் இல்லை எனக் கூறியுள்ளார்.

2. கொரோனா தடுப்பூசியின் விளைவு... டொராண்டோ பல்கலைக் கழகத்தின் நோய் எதிர்ப்பு நிபுணர் ஜெனிஃபர் கோமர்மேன் தற்போதைய தடுப்பூசிகளும் அவற்றின் பூஸ்டர்களும் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுபடுத்துகின்றன என்றும், இது கொரோனாவால் ஏற்படும் கடுமையான நோய்களுக்கு இரையாகாமல் நம்மை பாதுகாக்கிறது என்றும், உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள் ஒமைக்ரானை குறிவைத்து புதிய வகை தடுப்பூசிகளை தயார் செய்து வருகின்றன என்றும் தெரிவிதுள்ளார்.

3.நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஒமைக்ரான்..
ஒமைக்ரான் தொற்று மற்றும் மாறுபாடுகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஒரு சமீபத்திய ஆராய்ச்சியில் ஒமைக்ரான் தொற்றின்போது டெல்டா வகை மாறுபாட்டிற்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது, இருப்பினும் நோயாளி முழுமையாக தடுப்பூசி போட்டால் மட்டுமே இது சாத்தியமாகும் என தெரிவிக்கிறது

4. இயற்கை நோயெதிர்ப்பு சக்தி.. அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி அந்தோணி ஃபெளசியின் கணிப்புப்படி உலகில் உள்ள அனைத்து மக்களும் கொரோனாவின் புதிய மாறுபாட்டால் பாதிக்கப்படுவார்கள். இது நடந்தால் ஒமைக்ரான் உலகில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா மாறுபாடாக மாறும,  மேலும் மக்கள் அதற்கு எதிராக இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள் எனக் கூறியுள்ளார். 

5. கொரோனாவின் கொடிய வடிவம்..

மனிதர்களைக் கொல்லும் வைரஸ் அவர்களுடன் இறந்துவிடும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால் அதே வகையான வைரஸ் இயற்கையில் உயிர் வாழ முடியும், அது உலகின் பெரும் மக்கள்தொகையிலும் வாழ முடியும் என்பது இதன் மூலம் தெரிகிறது.  1918ல் பரவிய காய்ச்சல் இன்று வெறும் சளி, இருமல் வைரசாக மாறி விட்டதை போல கொரோனா வைரசும் மாறலாம் என அவர் கூறியுள்ளார். ஒமைக்ரான் டிசம்பர் 11 முதல் நாட்டில் பரவத்தொடங்கியது. இந்த வைரஸ் நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போதுள்ள நெருக்கடி இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும், மார்ச் 11க்கு பிறகே கொரோனாவிலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என விஞ்ஞானி சமீரன் பாண்டா கூறியுள்ளார்.

டெல்டா, ஒமைக்ரானுக்கு பிறகு அடுத்து புதிய மாறுபாடுகள் எதுவும் தோன்றவில்லை என்றால், கொரோனா தொற்றின் வீரியம் குறைந்து அது சாதாரண சளி காய்ச்சல் போல மாறும் என சமிரான் பாண்டா கூறியுள்ளார். அதேபோல் மும்பை டெல்லியில் உச்சம் அடையுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், இதற்கு அடுத்த இரண்டு வாரங்கள் கழித்தே கூறமுடியும், ஏனெனில் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் மூன்றாவது அலை வெவ்வேறு நிலைகளில்  உள்ளது. தற்போதைய நகரங்களின் ஒமைக்ரான் டெல்டா இடையான சதவீதம்  80:20 ஆக உள்ளது என அவர் கூறியுள்ளார்.  
 

click me!