அட இது என்ன புது ட்விஸ்ட்.. சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பாஜக பங்கேற்கும்? அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை..!

Published : Feb 08, 2022, 07:29 AM IST
அட இது என்ன புது ட்விஸ்ட்.. சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பாஜக பங்கேற்கும்? அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை..!

சுருக்கம்

அனைத்து கட்சி கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இன்று சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது. 

நீட் விவகாரம் தொடர்பான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பாஜக பங்கேற்கும்  என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்பேரவை முதல்கூட்டத்திலேயே மசோதா நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, திமுக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பான மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அன்றே குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், 6 மாதங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி நீட் மசோதாவை தமிழக சட்டப்பேரவை தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். நீட் மசோதா, கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகவும், மேலும் பல்வேறு காரணங்களையும் குறிப்பிட்டு, அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று கூறி வருகின்றனர். 

இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. இதில், அதிமுக, பாஜக, புரட்சி பாரதம்  உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. இதனையடுத்து, அனைத்து கட்சி கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இன்று சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் பாஜக பங்கேற்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நீட் விவகாரம் தொடர்பான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பாஜக பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!