மீண்டு வருவேன்... கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனின் உருக்கமான பதிவு..!

Published : Jun 22, 2020, 12:18 PM IST
மீண்டு வருவேன்... கொரோனாவால் பாதிக்கப்பட்ட  திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனின் உருக்கமான பதிவு..!

சுருக்கம்

தற்போது நான் கொரோனா நோய்க்காக மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். சிகிச்சையில் எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனது குடும்பத்தினரும் நலம் பெற்று வருகின்றனர். கழகத் தலைவர் தளபதி அவர்களும் மூத்த முன்னோடிகளும் என்னிடமும் எனக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களிடமும் இன்று தொடர்பு கொண்டு பேசினார்கள். 

திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முழுநலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட உறவினர் திருமண விழாவில் பங்கேற்று வந்த அவரது மனைவி மற்றும் மகள் உள்பட குடும்பத்தில் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவரது உடல்நிலை தொடர்பாக மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கேட்டறிந்து வருகிறார். 

இந்நிலையில், இது தொடர்பாக வசந்தம் க.கார்த்திகேயன் முகநூல் பக்கத்தில்;- என்மேல் அன்பு கொண்ட நண்பர்கள், கழகத்தோழர்கள், நிர்வாகிகளுக்கும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் எனது வேண்டுகோள்.

தற்போது நான் கொரோனா நோய்க்காக மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். சிகிச்சையில் எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனது குடும்பத்தினரும் நலம் பெற்று வருகின்றனர். கழகத் தலைவர் தளபதி அவர்களும் மூத்த முன்னோடிகளும் என்னிடமும் எனக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களிடமும் இன்று தொடர்பு கொண்டு பேசினார்கள். தற்போது நான் மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் உள்ளேன். 

ஆகவே நான் ஓய்வில் இருப்பதால் தயவு செய்து இரண்டு வாரங்களுக்கு தாங்கள் என்னை தொலைபேசியில் தொடர்புகொள்வதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். விரைவில் கழகத் தலைவரின் ஆசியானாலும், உங்களின் அன்பினாலும் நலம்பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வருவேன் என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?