உடுமலை கவுசல்யா தந்தை விடுதலை... நீதிமன்ற தீர்ப்பை கிண்டலடித்துக் கதறும் இயக்குநர் பா.ரஞ்சித்..!

By Thiraviaraj RMFirst Published Jun 22, 2020, 11:46 AM IST
Highlights

உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை இயக்குநர் பா.ரஞ்சித் கிண்டலடித்துள்ளார். 
 

உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை இயக்குநர் பா.ரஞ்சித் கிண்டலடித்துள்ளார். 

இந்த தம்பதிக்கு கவுசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பலால் சரமாரியாக வெட்டியது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். 

 கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல் ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். அதேபோல், 9'வது குற்றவாளியான தன்ராஜ் மற்றும் 11'வது குற்றவாளியான மணிகண்டன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.

உயர்😆😆😆நீதி😁😁😁மன்றம்😜😜😜 https://t.co/IK0495fKsr

— pa.ranjith (@beemji)

 

இந்த வழக்கு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் உயர்நீதிமன்றத்தை கிண்டலடித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தீர்ப்பு பல்லை இழிப்பது போல இமோஜிகளை பதிவிட்டுள்ளார் பா.ரஞ்சித்.

click me!