கவுசல்யா சக்தியோடு சந்தோஷம்... சின்னச்சாமி குடும்பத்திற்கும் மகிழ்ச்சி.. பாவம் சங்கர் குடும்பம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 22, 2020, 11:32 AM IST
Highlights

உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியது.
 

உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியது.

உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு கவுசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பலால் சரமாரியாக வெட்டியது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். இது தொடர்பான வழக்கை விசாரித்த, திருப்பூர் நீதிமன்றம் நீதிபதி அலமேலு நடராஜன், குற்றம்சாட்டப்பட்டவர்களில் கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, அவருடைய தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய மூவரையும் விடுவித்தார்.

மீதமிருந்த 9 பேரில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல் ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.9வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 11வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் சின்னச்சாமிக்கு தூக்குதண்டனையோடு பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 3 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் 2 லட்ச ரூபாயை கௌசல்யாவுக்கு அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.  ஜெகதீசனுக்கு தூக்கு தண்டனையோடு 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மணிகண்டன், செல்வக்குமார் ஆகியோருக்கு தூக்கு தண்டனையோடு தலா 1,65,000 அபராதம் விதிக்கப்பட்டது. மரண தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். அதேபோல், 9'வது குற்றவாளியான தன்ராஜ் மற்றும் 11'வது குற்றவாளியான மணிகண்டன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், தூக்கு தண்டனை பெற்ற மற்ற 5 பேருக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரை விடுவித்து காவல்துறை தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தனர். கவுசல்யாவும் சந்தோசமா இருக்கு. சின்ன சாமியும் அவன் குடும்பமும் சந்தோசமா இருக்கும். அவன் சாதிக்காரன் ரொம்ப சந்தோசமா இருப்பாங்க
பாவம் அந்த பய  சங்கர் அவன் குடும்பமும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

click me!