என்னாங்கடா இப்படியெல்லாம் கூட நடக்குமா..? அடடே... சபாஷ் போட வைத்த எடப்பாடியார்..?

By Thiraviaraj RMFirst Published Nov 11, 2020, 3:30 PM IST
Highlights

மாரீஸ்வரி நினைத்தது இவ்வளவு சீக்கிரம் என அவரே நினைத்திருக்க மாட்டார். உங்களால் நம்பவே முடியாது. ஆம், நடந்தது... அடுத்த 2 மணி நேரத்தில்...

மாற்றுத் திறனாளியின் மனம் விம்மி வெடிப்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மனம் உருகி உணர்ந்ததால்தான் இப்படியொரு காரியத்தை யோசித்து முடிவெடுப்பதற்கு முன்பே செய்திருக்கிறார். ஒரு மனு அனுப்பி அந்த கோப்பு கிடப்பில் போடப்பட்டு, ரெகமெண்ட் செய்யப்பட்டு... அலையாய் அலைந்து... அந்தக் கதையெல்லாம் இங்கே இல்லை. மனு கொடுத்த அரைமணி நேரத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணிநியமன ஆணையை உடனடியாக வழங்கியிருக்கிறார் முதல்வர்.

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான மாரீஸ்வரி. எம்.ஏ., படித்த  மாற்று திறனாளி பெண். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் நவீன கருவியை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இன்று தூத்துக்குடிக்கு வந்தார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு,  தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே முதல்வரின் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சலையோரத்தில்  28 வயதான மாரீஸ்வரியை அவரது அப்பா தூக்கி வைத்து கொண்டிருந்தார்.

இந்த காட்சியை பார்த்ததுமே காரை நிறுத்திவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது மாரீஸ்வரியின் கையில் ஒரு மனு இருந்தது. கையில் இருந்த மனுவையும் முதல்வரிடம் தந்து அரசு வேலை வேண்டும் என்று மாரீஸ்வரி கேட்டார். அந்த மனுவை முதல்வர் பெற்று கொண்ட முதல்வர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சென்று விட்டார். முதல்வரிடம் மனு கொடுத்தால் அவர் பிரச்னையை தீர்த்து வைப்பார். சில காலம் ஆகலாம் என அங்காய்த்து கொண்டு மாரீஸ்வரியும் அவரது தந்தையும் கிளம்பி விட்டனர்.

 ஆனால், மாரீஸ்வரி நினைத்தது இவ்வளவு சீக்கிரம் என அவரே நினைத்திருக்க மாட்டார். உங்களால் நம்பவே முடியாது. ஆம், நடந்தது... அடுத்த 2 மணி நேரத்தில்... தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணிக்கான உத்தரவை வழங்க நடவடிக்கை எடுத்தார். அந்த பணி நியமன உத்தரவையும் மாரீஸ்வரிக்கு வழங்கினார் முதல்வர் எடப்பாடி. 

எடப்பாடியாரின் இந்த துரித நடவடிக்கையை போல இதுவரை இருந்த எந்த முதல்வரும், ஏன் பிரதமரும் கூட எடுத்திருக்க முடியாது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். எடப்பாடியாரின் இந்த நடவடிக்கையை அனைவரும் சபாஷ் போட்டு பாராட்டி வருகின்றனர். 

click me!