துரைக்கண்ணுவின் மரணத்தை கொச்சைப்படுத்துவது கீழ்த்தனமான அரசியல்.. ஸ்டாலினை வறுத்தெடுத்த ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Nov 11, 2020, 2:34 PM IST
Highlights

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனவர்கள் மற்றும் பெண்களுக்கு நல திட்ட உதவிகளை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனையில் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது திமுகவின் வாடிக்கையாகிவிட்டதாக குற்றம்சாட்டினார். அந்த அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பத்தினரிடம் எந்த விதமான சோதனையோ, விசாரணை நடத்தப்பட்டதாக வெளியான தகவலையும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக மறுத்தார். துரைக்கண்ணுவின் மரணத்தைக் கொச்சைப்படுத்துவது கீழ்த்தரமான அரசியல். மேலும், திமுகவிடம் வாங்கும் பணத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவே goback ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்படுள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு முரண்பட்ட கூட்டணி என்றும் அவர் விமர்சித்தார். ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் பழனிசாமி தான் கொடியேற்றுவார் என்றும், கமல்ஹாசன் உள்ளிட்ட மீதமுள்ளவர்கள் வேண்டுமானால் செஞ்சி கோட்டையில் போய் கொடி ஏற்றிக் கொள்ளட்டும். அதிமுக பாஜக இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார். 

click me!