அதிமுக எதிர்க்கட்சியாக வராதா..? விரக்தியில் மு.க. ஸ்டாலின்... பொளந்துகட்டும் மாஃபா பாண்டியராஜன்..!

By Asianet TamilFirst Published Jan 17, 2021, 10:02 PM IST
Highlights

தேர்தலுக்கு பிறகு எதிர்கட்சியாகக்கூட அதிமுக இருக்காது என திமுக தலைவர் முக ஸ்டாலின் விரக்தியில் பேசிவருகிறார் என்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 

தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆவடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எம்ஜிஆர் மீதான திடீர் பாசத்தாலும் ஜெயலலிதா மீதான எதிர்ப்பு அரசியலாக கமல்ஹாசன் வியூகம் வகுத்துவருகிறார். ‘விஸ்வரூபம்’ படம் வெளி வரவில்லையெனில், இந்திய நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கமல் சொன்னார். ஜெயலிதாவின் உதவி இல்லாமல் அந்த திரைப்படம் வெளிவந்திருக்காது எனப் பதிவு செய்த கமல், தற்போது எம்ஜிஆர் இருந்திருந்தால் இதுபோன்று நேர்ந்திருக்காது என கூறுவது போலித்தனம். இது கமல்ஹாசன் முழு அரசியலுக்கு வந்துவிட்டதைக் காட்டுகிறது.
தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் அளித்தது முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது துறையில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். திரைத்துறையின் நிலைமையை திமுக ஆட்சியோடு ஒப்பீட்டு கமல் சற்று யோசித்து பார்க்க வேண்டும். தேர்தலுக்கு பிறகு எதிர்கட்சியாகக்கூட அதிமுக இருக்காது என திமுக தலைவர் முக ஸ்டாலின் விரக்தியில் பேசிவருகிறார். நாங்களும் இந்துத்துவத்தை ஆதரிக்கும் கட்சிதான் என யூடர்ன் அடிக்கப் பார்க்கிறது திமுக. 
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏதாவது வியூகம் வகுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். திமுகவின் போலித்தனத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு உள்ள வரவேற்பை கண்டு மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியாமல் இது போன்று அவர் பேசி வருகிறார்” என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
 

click me!