“அந்த மனுஷன் போராட்டத்துக்கு வராததே நல்லது...” அஜித் வரலன்னா ஒரு அர்த்தம் இருக்கும்... கழுவி ஊத்தும் தமிழக மக்கள்! கப்சிப் திரையுலகினர்!

 
Published : Apr 09, 2018, 05:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
“அந்த மனுஷன் போராட்டத்துக்கு வராததே நல்லது...” அஜித் வரலன்னா ஒரு அர்த்தம் இருக்கும்...   கழுவி ஊத்தும் தமிழக மக்கள்! கப்சிப் திரையுலகினர்!

சுருக்கம்

Why Thala Ajith Ignored Nadigar Sangam Protest

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் இன்று ஒரு நாள் அடையாள அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க முதல் ஆளாக வந்தார் விஜய்.

ஆனால் மாலை வரை திரையுலகினர் எர்பார்த்துக் கொண்டிருந்த அஜித் கடைசி வரை அந்த பக்கமே வரவில்லை. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தல அஜித் ஏன் வரவில்லை என தகவல் கசிந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் இன்று மவுன அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு அப்படி ஒரு போராட்டமே நடக்கவில்லை மாறாக மவுன போராட்டம் கலகலப்பாக இருந்துள்ளது.

தமிழகமெங்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் நாங்களும் மக்களுக்காக போராடினோம் பார்த்துக் கொள்ளுங்கள் தண்டோராப் போடாத குறையாக பெயருக்கு நடந்த மவுன போராட்டம் பார்ப்பவர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழகமே மத்திய மாநில அரசை எஹிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வேலையில் பிரச்சனையின் தீவிரத்தை உணராமல் திரையுலகினர்   பந்தலில் ஜாலியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.  தொடர்ந்து ஒளிபரப்பான இந்த போராட்ட நிகழ்வில் நடிகர்கள் இடைவிடாது சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருந்ததை டிவியில் பார்த்து மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். அதேபோல, சிவகார்த்திகேயனும், தனுஷும் அருகருகே அமர்ந்தது மட்டும் அல்லாமல் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.

போராடுவது என்றால் எங்களுடன் களத்தில் வந்து போராட வேண்டியது தானே. போராட்டம் என்ற பெயரில் இப்படி பந்தல் போட்டு ஜாலியாக சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதற்கு பேரு தான் போராட்டமா? என கொந்தளித்துள்ளனர். அதேபோல இவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் நடிகர் அஜித் வேறு கலந்துகொள்ளவில்லை என எழுந்த சர்ச்சைக்கு மக்களே புரிந்துகொண்டு நீங்கள் நடத்தும் இந்த கூத்துக்குஅந்த மனுஷன ஏன் இழுத்து விடுறிங்க?  
அதேபோல நடிகர் அஜித்தின் ரசிகர்களோ...

ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருந்தும் எங்க தல அஜீத் வரல. அதனால எங்களுக்கு கோபமெல்லாம் இல்ல. தல எது செஞ்சாலும் சரியாகத்தான் இருக்கும் என சொல்கிறார்கள்.அஜித்தைப்போல கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாரா அந்த பக்கமே வரவில்லை. மேலும் கீர்த்தி சுரேஷ், தமன்னா, காஜல் அகர்வால் என்று முன்னணி நடிகைகள் யாருமே வரவில்லை.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!