
காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது இந்தி பற்றி மு.க.ஸ்டாலின் ஏன் கேட்கவில்லை என்று மத்திய வர்க்கத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்பில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், " காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது இந்தி குறித்து கேள்வி எழுப்பாத ஸ்டாலின், தற்போது தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுகிறு என்று கூறுவதா? என்று எடுத்த எடுப்பிலேயே காட்டாமாக பதிலளித்தார்.
இதோடு நிற்காமல் ஓவர் டூ டிடிவி மேட்டர் என்பதைப் போல, தினகரன் கைதுக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்ட நிர்மலா, கொடநாடு உள்ளிட்ட விவகாரங்களில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்று கூறினார். தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளையும் வைத்து வாழும் நிலையில் பா.ஜ.க. இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.