எம்.பி.க்கள் ராஜினாமா செய்யணும்னு  ஸ்டாலின் ஏன் சொல்றார் தெரியுமா?  தம்பிதுரை தரும் புது விளக்கம் !!

First Published Mar 23, 2018, 1:56 PM IST
Highlights
why stalin ask to resign mp s in tamilnadu..thambidurai explain


தற்போது எம்.பி.யாக இருக்கும் கனிமொழியை எப்படியாவது அப்பதவியில்  இருந்து நீக்க வேண்டும் என்ற அரசியல் சித்து விளையாட்டுக்காக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்துவதாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை புது விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2–வது கட்ட அமர்வு  கடந்த 5–ந் தேதி தொடங்கியது. ஆனால் காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம் உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால்  எந்த அலுவல்களும் நடைபெறாமல் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இதனால்  கடந்த 15  நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்ப்பட்டு உள்ளன.  இந்த நிலையில் நாடாளுமன்றம்  தொடங்கியதில் இருந்து அதிமுக எம்.பிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று காலை அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாத்தில் காந்தி சிலை முன்பு  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  தம்பிதுரை, 50 எம்பிக்களுக்கு மேல் இருந்தால்தான் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும்;  37 எம்பிக்களை கொண்ட அதிமுகவால் எப்படி தீர்மானம் கொண்டு வரமுடியும் என கேள்வி எழுப்பினார்

மு.க.ஸ்டாலின் ஆந்திர கட்சிகள் கொண்டுவரும்  நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க சொல்கிறார். தமிழகத்தை வஞ்சிக்கும் ஆந்திர அரசுக்கு ஆதரவாக செயல்படுமாறு கூறுகிறாரா ஸ்டாலின்? என கேள்வி எழுப்பினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். அவர் ஏன் அப்படி சொல்கிறார் என யாருக்காவது தெரியுமா என கேள்வி எழுப்பிய தம்பிதுரை, அதற்கு திமுக குடும்பச் சண்டைதான் காரணம் என கூறி ஆச்சரியப்படுத்தினார்.

தற்போது எம்.பி.யாக இருக்கும் கனிமொழியை எப்படியாவது அப்பதவியில்  இருந்து நீக்க வேண்டும் என்ற அரசியல் சித்து விளையாட்டுக்காக எம்.பி.க்கள்  அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார் என்றும் தம்பிதுரை குறிப்பிட்டார்.

click me!