
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தோந்தெடுக்கப்பட்டார்.அதே நேரத்தில் ஓபிஎஸ் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கு சசிகலாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதனால் பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வை தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கினர். நாளுக்கு நாள் தீபா வீட்டுக்கு தொண்டர்கள் படையெடுக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் சசிகலா-ஓபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டது. ஓபிஎஸ்ஐ முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு,சசிகலா முதலமைச்சராக முயன்றார்.இதனால் போர்க்கொடி உயர்த்திய ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து சென்றார்.
அதே நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்த, அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.சசிகலா-ஓபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவியபோது ஓபிஎஸ்ம் தீபாவும் ஜெயலலிதா நினைவிடத்தில் சந்தித்தனர்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல ஓபிஎஸ்ம், தீபாவும் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்தனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் தீபா தனியாகவே செயல்படத் தொடங்கினார்.இவ்வளவு தூரம் வெளிப்படையாக அறிவித்துவிட்டு பின்னர் ஏன் இருவரும் தனித்தனியாக செயல்படுகிறார்கள் என கேள்வி எழுந்தது.
அப்போதுதான் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. தீபா-ஓபிஎஸ் இரு தரப்பினரும் இணைந்த செயல்படுவதற்கு தீபா வைத்த விலை ஓபிஎஸ் உள்ளிட்டோரை பதறி அடிக்கச் செய்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் பதவி மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் பதவி ஆகிய இரண்டையும் தானே வைத்துக் கொள்வதாக இருந்தால் இணைந்த செயல்படலாம் என தீபா டிமாண்ட் வைத்துள்ளார்.
இதனால் அதிர்ந்து போன ஓபிஎஸ் தரப்பினர் பின்னர் அது குறித்து பேசுவதேயில்லை.