தில்லை நடராஜர் ஏன் காலைத் தூக்கி ஆடுகிறார்.. ஆபாசமாக பேசிய யூ2 புரூட்டஸ் மைனர்.. கொதிக்கும் கரு நாகராஜன்.

Published : Apr 29, 2022, 01:44 PM ISTUpdated : Apr 29, 2022, 01:55 PM IST
 தில்லை நடராஜர் ஏன் காலைத் தூக்கி ஆடுகிறார்.. ஆபாசமாக பேசிய யூ2 புரூட்டஸ் மைனர்.. கொதிக்கும் கரு நாகராஜன்.

சுருக்கம்

அதில் யூடூ புரூட்டஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் மைனர் விஜய் என்பவர் இந்து கடவுள்களை தொடர்ந்து மிக ஆபாசமாக வசித்து வருகிறார். சமீபத்தில் தில்லை நடராஜர் ஏன் காலைத் தூக்கி ஆடுகிறார் என்று அவர் பேசியுள்ள வீடியோ ஆபாச அருவருப்பின் உச்சகட்டம்.

திமுக அரசும் தமிழக காவல்துறையும் இந்து தெய்வங்களை அவமதிக்கும் செயல்களை வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல என பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 U2 brutas என்ற யூடியூப் சேனலில்  தில்லை நடராஜரை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாகவும் உடனே அந்த சேனலில் பேசும் மைனர் விஜய் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

இந்து தெய்வங்களைப் போற்றும் மிகப் பெரும்பான்மை மக்கள் வாழும் தமிழகத்தில் இந்து உணர்வுகளையும், தொன்றுதொட்டு இருந்துவரும் ஆன்மிக உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் காயப்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் அதன் மூலம் சமூகத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட சிந்தனையோடும் சிலர் கெடு மதியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே தமிழ் கடவுள் முருகனைப் போற்றும் கந்த சஷ்டி கவசத்தை கேலி கிண்டல் செய்து தமிழக மக்களின் ஆன்மீக உணர்வுகளை வேதனைப்படுத்திய கயவர் கூட்டமான கருப்பூர் கூட்டத்தின் செயல்கள் இன்றும் தமிழக மக்களின் இதயங்களில் ஆறாத வடுக்களாய் இருக்கிறது. அதே போன்று மேலும் சில யூடியூப் சேனல்கள் இப்போது செயல்பட தொடங்கி இருக்கிறார்கள்.

அதில் யூடூ புரூட்டஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் மைனர் விஜய் என்பவர் இந்து கடவுள்களை தொடர்ந்து மிக ஆபாசமாக வசித்து வருகிறார். சமீபத்தில் தில்லை நடராஜர் ஏன் காலைத் தூக்கி ஆடுகிறார் என்று அவர் பேசியுள்ள வீடியோ ஆபாச அருவருப்பின் உச்சகட்டம். அது போன்று பேச முற்படும் அவர்களின் அடி மட்டமான சிந்தனைகள் எப்படி இருக்கும் என்பதையும் அவர்களின் நோக்கத்தையும் எளிதில் தமிழக மக்கள் புரிந்து கொள்ள முடியும்.

இதுகுறித்து தமிழக காவல்துறை தலைவருக்கு சமூக ஆர்வலர்களும், முக்கிய அமைப்புகளின் தலைவர்களும் புகார் கடிதம் கொடுத்தும், காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது எதைக் காட்டுகிறது. தமிழக அரசின் ஆசியோடு தான் இது போன்ற புல்லுருவிகள் செயல்படுகிறார்களா? என்று எண்ணத் தோன்றுவது நியாயம்தானே.

தமிழக மக்களின் ஆன்மீக உணர்வுகளை கொச்சைப்படுத்தும் பலர் தமிழகத்தில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு துணைபோகும் செயலில் ஆளும் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒத்துப் போகிறார்கள் என்ற எண்ணம் தமிழக மக்களிடையே வளர்ந்து வருகிறது. திமுக மற்றும் முதல்வர் குறித்து கருத்து சொல்லக் கூடிய பலர் மீது உடனடி சட்ட நடவடிக்கை கைது நடவடிக்கையால் நடவடிக்கை மேற்கொள்ளும் திமுக அரசு தமிழக காவல்துறையும், இந்து கடவுள்களை அவமதிக்கும் சம்பவங்களை மட்டும் வேடிக்கை பார்ப்பது என்ன நியாயம். மக்கள் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள் மனதளவில் குமுறி கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

திமுக அரசும் தமிழக காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். யூடூ புரூட்டஸ் யூட்யூப் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று அமைதியை விரும்புகின்ற, கலாச்சாரத்தை பாதுகாத்து வருகின்ற கோடான கோடி தமிழ் நல்லுள்ளங்கள் சார்பிலும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.  இப்படிக்கு கரு. நாகராஜன் என அதில் கூறப்பட்டுள்ளது.  
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!