நீட் தேர்வால் இறந்த மாணவர்களுக்கு ஏன் மோடியோ, அண்ணாமலையோ இரங்கல் கூட தெரிவிக்கவில்லை? டாராக கிழித்த கி.வீரமணி

By Ezhilarasan BabuFirst Published Sep 21, 2021, 5:01 PM IST
Highlights

உண்மையிலேயே பாஜகவுக்கு சமூக நீதியில் அக்கறை இருந்தால் நீட் தேர்வால் உயிரிழந்த குழந்தைகளுக்குகூட ஏன் பிரதமர் மோடியோ அல்லது அண்ணாமலையோ இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

உண்மையிலேயே பாஜகவுக்கு சமூக நீதியில் அக்கறை இருந்தால் நீட் தேர்வால் உயிரிழந்த குழந்தைகளுக்குகூட ஏன் பிரதமர் மோடியோ அல்லது அண்ணாமலையோ இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவுக்கு இப்போதுதான்  ஞானோதயம் வந்துள்ளதுபோல எனவும் கி. வீரமணி விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தமிழகத்தில் அதற்கான எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நீட்தேர்வால் தமிழகத்தில் இதுவரை 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். தற்போது திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்ககோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி  அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது தொடர்பாக சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கலந்து கொண்டன. 

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானதாகும், மாநில உரிமையை பறிப்பதாகும், ஏழை எளிய மக்களின் கனவை சிதைப்பதாக உள்ளது என்றார். இந்த நேரத்தில் இந்த தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது அதை செய்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். அதேபோல் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு குறித்து மக்களுக்கு விளக்க பெருந்திரள் மக்கள் எழுச்சி இயக்கமாக பெரிய அளவில் மாநாடு கொரோனா விதிகளை பின்பற்றி நடத்தப்படும் என்றார். 

நீட்டுக்கு எதிராக அதிமுக சட்டம் நிறைவேற்றியதற்கும், திமுக நிறைவேற்றியதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. நீதியரசர்கள் மற்றும் அறிஞர் பெருமக்கள், கல்வியாளர் குழுவினரின் அறிக்கையை ஏற்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்த தீர்மானத்தை அரசு நிராகரிக்க முடியாது அப்படி முயன்றால் அதை எதிர்க்க மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினார்.பாஜக உண்மையான சமூக நிதி கொண்ட கட்சி என அண்ணாமலை பேசி வருகிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கி.வீரமணி, உண்மையிலேயே பாஜகவிற்கு சமூக நீதியில் அக்கறை இருந்தால் நீட் தேர்வில் அதை காண்பிக்கலாமே என கூறிய அவர், இதுவரை நீட் தேர்வால் உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடியோ, அண்ணாமலையோ, இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

click me!