விஜயலட்சுமிக்கு எதுக்கு வீடு எடுத்து குடுத்த.?? ஹரி நாடாரை பத்திரிக்கையாளர் மன்றத்தில் டாராக்கிய சீமான்.

Published : Feb 09, 2022, 06:28 PM IST
விஜயலட்சுமிக்கு எதுக்கு வீடு எடுத்து குடுத்த.?? ஹரி நாடாரை பத்திரிக்கையாளர் மன்றத்தில் டாராக்கிய சீமான்.

சுருக்கம்

உலகத்திற்கே நான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு இவர் ஏன் குரல் கொடுத்தார்? ஏதோ பேசி பிரச்சினையில் சிக்கிக் கொண்டுவிட்டு எனக்காக குரல் கொடுத்தேன் என்கிறார். 

நடிகை விஜயலட்சுமியை மிரட்டிவிட்டு பிறகு ஏன் ஹரி நாடார் அவருக்கு வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தார் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தன்னையும் தனது குடும்பத்தையும் விஜயலட்சுமி விமர்சித்தால் ஹரி நாடாருக்கு ஏன் கோபம் வருகிறது என்றும் அவர் வினவியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக 10 ஆண்டுகளுக்கு முன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. அப்போது சீமான் தன்னுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். பின்னர் சீமான் குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்து வந்த விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் சிவலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு புகைப்படம் வெளியிட்ட சீமானை கடுமையாகத் தாக்கிப் பேசி வீடியோ ஒன்று வெளியிட்டார் விஜயலட்சுமி. அந்த வீடியோ வைரலானது. அதனையடுத்து நாம் தமிழர் கட்சியில் தம்பிகள் நடிகர் விஜயலட்சுமியை விமர்சித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டதுடன்,  சிலர் அவருக்கு  தொலைபேசியில் அழைத்து மிரட்டியதாகவும் அப்போது கூறப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விஜயலட்சுமி தன்னுடன் சீமான் அரை நிர்வாணத்தில் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டார். பின்னர் அது தமிழகம் வைரலானது, பேசுபொருளானது.

ட்விட்டரில் #பொம்பளபொறுக்கி சீமான் என்ற ஹேஸ்டாப் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இதுபோல இன்னும் பல வீடியோக்கள் உள்ளதாகவும் தம்பிகளுக்கு ஷாக் கொடுத்தார் விஜயலட்சுமி. அதைத்தொடர்ந்து  சீமான் தம்பிகளுக்கும் விஜயலட்சுமிக்குமான மோதல் இன்று வரை தொடர்கிறது. இடையிடையே விஜயலட்சுமி சீமான் குறித்து வீடியோ வெளியிடுவதும் தொடர்கிறது. கடந்த ஆண்டு  சீமான் மற்றும் அவரது தாயாரை ஒருமையில் விமர்சித்து விஜயலட்சுமி பேசினார். அப்போது நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரான சீமானையும், அவரது தாயாரையும் ஒருமையில் பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கொந்தளித்த ஹரி நாடார் விஜயலட்சுமி பொதுவெளியில் சீமானை தொடர்ந்து ஒருமையில் பேசி அவமதித்தால் நாக்கை அறுப்பேன் என எச்சரிக்கை விடுத்தார் ஹரி நாடார். அப்போது அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் விஜயலட்சுமி. திருவான்மியூர் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சீமான் தான் தனது தற்கொலை முயற்சிக்கு காரணம் மற்றும்,தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு சீமான் தான் பொறுப்பு என்றும், சீமானுக்கு எதிராக ஹரி நாடார் என்பவர் தன்னை மிரட்டி வருகிறார் என்றும் கூறிய விஜயலட்சுமி ஹரி நாடார் மீது காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அதன் பிறகு ஹரி நாடார் தங்கும் வசதி இல்லாமல் தவித்து வந்த நடிகை விஜயலட்சுமிக்கு  வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்ததாகவும்,  ஒருகட்டத்தில் இருவரும் சமாதானமாகி விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில்தான் பெங்களூரை சேர்ந்த இருவர் கொடுத்த பணம் மோசடி வழக்கில் போலீசார் ஹரி நாடாரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் திருவான்மியூர் போலீசார் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை தூசிதட்டி அதிலும் ஹரிநாடாரை கைது செய்தனர். பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த ஹரிநாடாரை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 3 நாள் போலீஸ் விசாரணையில் எடுத்து  மீண்டும் அவரை சிறைக்கு அனுப்பினர். இந்நிலையில் மலேசியாவைச் சார்ந்த மஞ்சு என்ற பெண் தான் ஹரி நாடாரின் காதலி என்றும், நாடார் சமுதாயத்திற்காகவும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்காகவும்தான் தன் கணவர் ஹரிநாடார் குரல் கொடுத்தார். சீமானின் தாயாரின் விஜயலட்சுமி தரக்குறைவாக பேசிய போது நான் தான் என் கணவரை விஜயலட்சுமிக்கு எதிராக பேச சொன்னேன்.

அதனால்தான் ஹரி நாடார் விஜயலட்சுமிக்கு எதிராகப் பேசினார். நல்ல எண்ணத்தில் தான் நான் அப்படி சொன்னேன், அதனால்தான் ஹரிநாடார் கைது செய்யப்பட்டிருக்கிறார். சீமானுக்கும் ஹிரிநாடாருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. சீமானை அண்ணன் என்று தான் ஹரி நாடார் கூப்பிடுவார். இப்போது என் கணவர் சிறையில் இருக்கிறார், ஆனால்  அவருக்கு உதவி செய்ய எவருமே வரவில்லை என மஞ்சு ஆதங்கம் தெரிவித்திருந்தார். மேலும் விஜயலட்சுமிக்கு தங்குவதற்கு இடம் இல்லை, வீடு இல்லை என்பதால் அவருக்கு என் கணவர் 50 ஆயிரம் பணம் கொடுத்து உதவி செய்தார், ஒரு பெண் தங்குவதற்கு வீடு இல்லை என்ற போது என் கணவர் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவருக்கு உதவி செய்தார் என மஞ்சு கூறி பாரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் நாடார் சமுதாயத்திற்காகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கானவும்தான்  குரல் கொடுத்தேன் இப்போது சிறையில் இருக்கிறேன், ஆனால் தனக்கு உதவ யாரும் முன்வரவில்லை என  தன்னை சந்திக்க வருபவர்கள், வழக்கறிஞரிடம் ஹரி நாடார் கூறி ஆதங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில்தான் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். ஹரி நாடார் தங்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்துதான் சிறையில் இருப்பதாக அவரது காதலி கூறிவருகிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, (தனக்கே உரிய நையாண்டி நக்கல் சிரிப்புடன்) ஹரி நாடார் அவர்களை நான் எனக்கு குரல் கொடுக்கும் படி கேட்டேனா.. உலகத்திற்கே நான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு இவர் ஏன் குரல் கொடுத்தார்? ஏதோ பேசி பிரச்சினையில் சிக்கிக் கொண்டுவிட்டு எனக்காக குரல் கொடுத்தேன் என்கிறார். என்னையும் எனது குடும்பத்தையும் விஜயலட்சுமி பேசுவதை எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் தெரியும், அதற்கு நான் கோபித்துக் கொள்ளவில்லை, என் அம்மா கோபித்துக் கொள்ளவில்லை, என் பொண்டாட்டியும் கோபித்துக் கொள்ளவில்லை,  விஜயலட்சுமை அப்படி எதிர்த்துவிட்டு  பிறகு ஏன் அவருக்கு வாடகைக்கு வீடு எடுத்து கொடுக்க வேண்டும் (சிரிக்கிறார்) ஹரியை பொறுத்தவரையில் அவன் எனக்கு தெரிந்த தம்பி. ஹரி கட்டப்பஞ்சாயத்து செய்வான்? நான் செய்வேனா? தயவுசெய்து என்னிடத்தில் கேட்கும் கேள்விகளை தரமான கேள்விகளாக கேளுங்கள் என சீமான் கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!