திருவள்ளுவர் மீது உங்களுக்கு ஏன் பாசம்னு எங்களுக்குத் தெரியாதா..? பாஜகவின் திட்டம் பற்றி திருமாவளவன் காட்டம்!

By Asianet TamilFirst Published Nov 9, 2019, 9:02 AM IST
Highlights

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளி விட்டது. மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக நடைபெற்றுவருகிறது. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள் பெரும் கஷடத்துக்கு ஆளானார்கள். அதன் எதிரொலியாக தற்போது இந்திய பொருளாதாரம் மீண்டு வர முடியாது பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காகவே தமிழின் மீதும் திருவள்ளுவர் மீது உரிமை கோருவது போல் பாஜகவினர் நடிக்கிறார்கள் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
விசிக தலைவர் தொல்.  திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். ”தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நீண்ட காலமாக நடத்தப்படவில்லை. தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என கூறுகிறார்கள். திமுகவுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது தொடர்பாக தற்போது பேசப்பட்டு வருகிறது.


திருவள்ளுவர் சாதி, மத அடையாளங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். உலகமே போற்றும் திருவள்ளுவரை மத அடையாளத்துக்குள் பாஜக திணிப்பதை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று பாஜக முயற்சி செய்துவருகிறது. அந்த நோக்கத்திலேயே தமிழ் மீதும் திருவள்ளுவர் மீதும் உரிமை கோருவதுபோல் பாஜகவினர் நடிக்கிறார்கள். திருவள்ளுவர் மீது காவி சாயம் பூசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நவ. 11 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளி விட்டது. மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக நடைபெற்றுவருகிறது. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள் பெரும் கஷடத்துக்கு ஆளானார்கள். அதன் எதிரொலியாக தற்போது இந்திய பொருளாதாரம் மீண்டு வர முடியாது பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

click me!