ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய அஞ்சுவது ஏன்.. முதல்வர் ஸ்டாலினை வெறுப்பேற்றும் ஆம்ஆத்மி.

Published : Jun 08, 2022, 05:59 PM IST
ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய அஞ்சுவது ஏன்.. முதல்வர் ஸ்டாலினை வெறுப்பேற்றும் ஆம்ஆத்மி.

சுருக்கம்

ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் அதிகாரிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இனியும் தாமதம் ஏன்? என்றும் ஆத்மிகட்சியின் தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன் முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார்?

ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் அதிகாரிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இனியும் தாமதம் ஏன்? என்றும் ஆத்மிகட்சியின் தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன் முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார்?

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- கடந்த அதிமுக ஆட்சியில் மிகப் பெரும் ஊழல் நடந்துள்ளதாக கூறி இன்றைய தமிழக முதல்வர் அன்றைய எதிக்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் ஊழல் செய்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதும் அதற்கு துணைபோன ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் அடுக்கடுக்கான புகார்களை அன்றைய தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித்திடம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வழங்கினார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் தனி நீதிமன்றம் அமைத்து ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் அத்தனை பேர் மீதும்,  ஊழல் செய்த ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறைக்கு தள்ளப்படுவார்கள் என்று திரு.ஸ்டாலின் கூறினார் மேலும் அது திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டது. ஆம்ஆத்மிகட்சி சார்பில் திமுகழகம் 2021 வெற்றி பெற்ற முதல் நாள் முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்பதற்கு முன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்திவிட்டு பின் அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களிடம் நான் கூறியது, புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் திரு.மு.க.ஸ்டாலின் முதல் பணியாக ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் அதிகாரிகளை உடனே கைது செய்ய வேண்டும்!

தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல ஆளுநர் பன்வாரிலாலிடம் கொடுத்த முன்னாள் அதிமுக அமைச்சர்களின் மீதான ஊழல் புகார்களின் அடிப்படையில் லோக் ஆயுக்தா மூலமாகவோ அல்லது திரு மு க ஸ்டாலின் குறிப்பிட்டது போல தனி நீதிமன்றம் அமைத்தோ ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து குற்றவாளிகளை சிறையில் தள்ள வேண்டும் இனி ஊழல் இருக்கக்கூடாது ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினேன். அதை இன்று வரை தொடர்ந்து அதை எல்லா பேட்டிகளிலும் அறிக்கைகளிலும் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் வலியுறுத்தி வருறேன்.ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் ஏராளமான புகார்கள் அதற்கான ஆதாரங்களுடன் கிடைக்கப் பெற்றும் சரியான முகாந்திரம் இருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

முன்னால் அமைச்சர்கள் திரு..வேலுமணி, கே சி வீரமணி உள்ளிட்ட சிலர் மீது மட்டுமே எப்ஐஆர் போடப்பட்டு இருந்தாலும் யாரும் இதுவரை ஊழல் வழக்கில் கைது செய்யப்படவில்லை, ஊழல் செய்த ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் எந்த விதமான விசாரணை கூட இன்னும் சரியாக தொடங்கப்படவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர்களாக பணியாற்றிய ஊழலில் மலிந்த எந்த ஆணையர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  அதேபோல் கடந்த அதிமுக ஆட்சியில் ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் மிகப்பெரிய ஊழல் செய்த கிறிஸ்டி நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஐஏஎஸ் அதிகாரி திரு.ராம் மோகன் ராவ் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் ஊழல் புகார் கடுமையாக இருக்கிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
 
வெளிப்படையான நேர்மையான ஊழலற்ற ஆட்சியை தருவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தாமதம் ஏன்? என்று கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. டெல்லி ஆம்ஆத்மிகட்சி ஆட்சி போல தமிழகமும்  கல்வியிலும் சுகாதாரத்திலும்  வளர்ச்சியை தரவேண்டும் என்ற நல்ல நோக்கில் திரு மு. க ஸ்டாலின் அவர்கள் டெல்லி சென்று டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்கியுள்ள உலகத்தரம் வாய்ந்த அரசு பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் பார்த்து வந்தது பாராட்டுக்குரியது.டெல்லி திரு. கெஜ்ரிவால் ஆட்சியின் வெற்றிக்கு காரணம் ஊழல் இல்லாத ஆட்சியை தந்ததும் இந்தியாவிலேயே கடன் இல்லாத மாநிலமாக டெல்லியை மாற்றியிருப்பது தான் ஆகும்.

திரு ஸ்டாலின் தமிழகம் இந்தியாவில் ஒரு தரமான மாநிலமாக முதன்மையான மாநிலமாக உருவாக்க வேண்டும் என்றால் டெல்லி மாநிலத்தை போல் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அதன் முதல் நடவடிக்கையாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக லோக் ஆயுக்தாவை வலுப்படுத்த வேண்டும், லோக் ஆயுக்தாவின் மூலம் ஊழல் செய்த மக்கள் பணத்தை கொள்ளையடித்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் தற்போது திமுக ஆட்சியிலும் எந்த அமைச்சர்கள் அதிகாரிகள் தவறு செய்தால், அவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமீபத்தில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு சதவிகித  கமிஷன் கேட்டதற்காக அதாவது 1 கோடி 14 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். டெல்லி பஞ்சாப் போலவே திரு.மு க ஸ்டாலின் அவர்களும் யார் தவறு செய்தாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் மக்கள் பணியாற்ற தான் நாம் ஆட்சிக்கு வந்து இருக்கிறோம் என்பதை மனதில் ஏந்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!