தமிழகத்தில் கட்சிகளின் நிலை ! மத்திய உளவுத்துறை கொடுத்த கடைசி ரிப்போர்ட் என்ன சொல்லுது தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Apr 16, 2019, 1:33 PM IST
Highlights

நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளைப் பெறும் என்பது தொடர்பாக மத்திய உளவுத் துறை அனுப்பிய கடைசி ரிப்போர்ட் தற்போது எடப்பாடி பழனிசாமியின் கைகளில் உள்ளது.
 

17 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில்அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ளது.

இதே போல் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக. விசிக. இடது சாரிகள் என மற்றொரு தெரிய கூட்டணி அமைந்துள்ளது. இது தவிர கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன.

மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்து தனியாக, கெத்தாக  டி.டி.வி.தினகரன் களம் இறங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட தமிழகத்தில் 5  முனைப் போட்டி நடைபெறுகிறது என்றே சொல்ல வேண்டும்.

அதே நேரத்தில் கடந்த 9 ஆம் தேதி வரை பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன.  ஒரு சில கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணியும், வேறு சில கருத்துக் கணிப்புகளில் அதிமுக கூட்டணியும் வெல்லும் என சொல்லியிருந்தன.

அதே நேரத்தில் மத்திய மாநில அரசுகளின் உளவுத் துறைகளும் அவ்வப்போது தங்களது அறிக்கைகளை அளித்து வருகின்றன. இதன் அடிப்படையில் ஆளும் கட்சிகள் தங்கள் பிரச்சார பீயூகங்களை மாற்றி வந்தன.

இந்நிலையில் கடைசி கட்டமாக மத்திய உளவுத்துறை இன்று தங்களது அறிக்கையை அளித்துள்ளத. அதில் திமுக கூட்டணி 27 இடங்களையும், அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் அதில் பாஜக 2 இடங்களையும், தேமுதிக 1 இடத்தையும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அப்செட் ஆக்கியுள்ளது. 

click me!