எந்தெந்த தொகுதியில் யார் யாருக்கு சீட்? தி.மு.க. நிற்கப்போகும் தொகுதிகள் எவையெவை? ரிப்போர்ட் ரெடி: ஸ்டாலின் சாதிப்பாரா? சொதப்புவாரா!

By thenmozhi gFirst Published Nov 12, 2018, 5:19 PM IST
Highlights

மோடியை பிரதமராக்கியதில் பெரும் பங்கு ‘மாத்தி யோசி’ முறையில் அரசியலை அணுகியதில் இருந்தது. அவருக்காக அரசியல் கன்சல்டண்ட் டீம்கள் சில 2014 நாடாளுமன்ற தேர்தலில் செயல்பட்டன. 

மோடியை பிரதமராக்கியதில் பெரும் பங்கு ‘மாத்தி யோசி’ முறையில் அரசியலை அணுகியதில் இருந்தது. அவருக்காக அரசியல் கன்சல்டண்ட் டீம்கள் சில 2014 நாடாளுமன்ற தேர்தலில் செயல்பட்டன. சர்வே, தேர்தல் அறிக்கை, பிரசாரம் என எல்லாவற்றிலும் புதுப் புது ஐடியாக்களை மோடிக்கு வழங்கி செயல்படுத்த வைத்து, அதுவரையில் இந்தியா கண்டிராத ஒரு தேர்தல் அரசியலை செய்ய வைத்தது அந்த டீம். மோடியின் வெற்றிக்கு பெரிதாய் கையும் கொடுத்தது. 

இதைத்தான் 2016 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் செயல்படுத்தினார் ஸ்டாலின். மும்பையை சேர்ந்த கன்சல்டண்ட் நிறுவனம் ஸ்டாலினை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்து, அவரது அரசியல் அணுகுமுறையை மாற்றியது. வெள்ளை வேஷ்டி, சட்டை ஸ்டாலின் கலர்ஃபுல் உடைகள் அணிந்து ‘நமக்கு நாமே’ நடந்தது, இவர்களின் ஐடியாதான். இது ஸ்டாலினை முதல்வராக்காவிட்டாலும் கூட, முரட்டு மெஜாரிட்டியில் ஜெயலலிதாவை ஜெயிக்க விடாமல் செய்தது. எதிர்கட்சி தலைவராக ஸ்டாலினையும் அமர வைத்தது. 

ஆக இந்த டீமை வெற்றி டீமாகதான் நினைக்கிறார் ஸ்டாலின். விளைவு, இதோ 2019 மக்களவை தேர்தலுக்கும் இதே படையை களமிறக்கி இருக்கிறார். தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் சுற்றி வந்து சர்வே நடத்தியிருக்கிறது அதே பழைய டீம். ஒவ்வொரு தொகுதியையும் மூன்று குரூப்பாக பிரிந்து, தனித்தனி காலங்களில் சர்வே நடத்தி, அந்த ரிப்போர்ட்டுகளை எல்லாம் சேர்த்து வைத்து அலசி ஃபைனல் ரிப்போர்ட்டை ஸ்டாலினின் கைகளில் கொடுத்திருக்கிறார்கள்.


 அந்த ரிப்போர்ட்டில், நாற்பதில் எந்தெந்த தொகுதிகளில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது, எந்தெந்த தொகுதிகளை கூட்டணிக்கு தள்ளிவிடலாம், தி.மு.க.வில் எந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெல்லலாம், தி.மு.க.வில் எந்த தொகுதியில் கோஷ்டி பூசலின் காரணமாக வெற்றி பாதிக்கும், எந்தெந்த மாவட்ட செயலாளர்களை மாற்றியாக வேண்டும்... என அத்தனை தகவல்களையும் கொடுத்திருக்கிறார்கள். 

இந்த ரிப்போர்ட்டை கையில் வைத்துக் கொண்டுதான் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முதல் கியர் போட்டிருக்கிறார் ஸ்டாலின். ரிப்போர்ட்டில் உள்ள தொகுதிகளில் 95%தை எந்த சூழலிலும் இழக்க கூடாது, அவர்கள் சொல்லியிருக்கும் நபர்களுக்குதான் சீட் கொடுக்க வேண்டும்! என்றெல்லாம் ஸ்டாலின் உட்கார்ந்துவிட்டதாக அறிவாலயம் சொல்கிறது. 

சர்வே டீம் போட்டுக் கொடுத்திருக்கும் ரூட் படி செயல்பட்டால், சுமார் 30 தொகுதிகளையாவது தி.மு.க. கூட்டணி ஜெயிக்கும் என்கிறார்கள். இதனால் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார் ஸ்டாலின். ஆனால் இந்த விஷயத்தை மாற்றுக் கோணத்தில் அணுகும் அரசியல் விமர்சகர்கள், “சர்வே, அலசல், ஃபைனல் ரிப்போர்ட் என்றெல்லாம் உங்க ஓப்பனிங்கெல்லாம் நல்லாதான் இருக்குது ஸ்டாலின். 

ஆனால் வேலையை ஆரம்பிச்ச பிறகுதான் படபடப்பு, பரபரப்புல சொதப்புறீங்க. சில மாதங்களுக்கு முன்னாடி கட்சியின் அத்தனை மட்ட நிர்வாகிகளையும் அறிவாலயத்துக்கு வர வைச்சு ‘கள ஆய்வு’ நடத்தி, புகார்களை வாங்குனீங்க. கீழ் மட்ட நிர்வாகிகளுக்கு உரிமை கொடுத்து புகார்களை கொட்ட சொல்லி மேல்நிலை நிர்வாகிகளின் உண்மை முகத்தை உணர்ந்தீங்க. இந்த ஐடியா கூட அந்த கன்சல்டண்ட் டீம் கொடுத்ததுதான். 

உங்களை நம்பி உங்க கட்சி ஆளுங்களும் வந்து, கொட்டிட்டு போனாங்க புகார்களை. ஆனா என்ன நடந்துச்சு? எத்தனை மாவட்ட செயலாளர்களை மாத்துனீங்க? ஒண்ணும் கிடையாது. நீங்க நடவடிக்கை எடுக்காத தைரியத்துல, அந்த அடாவடி மா.செ.க்கள் பழைய நிலையை விட இன்னும் மோசமா நடக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதனால ‘தலைமை சரியில்ல’ன்னு சொல்லி உங்க கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்களெல்லாம் சத்தமில்லாம தினகரன் பக்கம் சாய ஆரம்பிச்சுட்டாங்க. 

இப்போ கூட இந்த டீம் எடுத்துக் கொடுத்த ரிப்போர்ட்டின் படி நீங்க வேட்பாளர்களை நிறுத்தப்போறீங்களா? அல்லது பழைய ஸ்டைல்ல உட்கட்சி பாலிடிக்ஸுக்கு பயந்து கண்டவங்களுக்கும் சீட்டை கொடுத்து சொதப்ப போறீங்களான்னு பார்ப்போம். ஃபினிஷிங் சரியில்லேன்னா எப்படி ஸ்டாலின் சார் ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆகும்?” என்று கேட்கின்றனர்.

click me!