அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு, WHO கொடுத்தது பதிலடி! வாயை கொடுத்து வாங்கி கட்டிய ட்ரம்ப்..!!

Published : Apr 09, 2020, 09:29 AM IST
அமெரிக்க  அதிபர் ட்ரம்ப்க்கு,     WHO கொடுத்தது பதிலடி! வாயை கொடுத்து வாங்கி கட்டிய ட்ரம்ப்..!!

சுருக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம செயல்படுவதாகவும்,அதேநேரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு நாங்கள் தான் அதிக அளவில் பணத்தை அளித்து வருகிறோம்.அதை நிறுத்தப்போகிறோம் என அறிவித்திருந்தார் ட்ரம்ப்.இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது WHO.

T.Balamurukan

உலக சுகாதார அமைப்பின் தலைவர்,அமெரிக்க அதிபர் டிரம்ப் எழுப்பிய விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலளித்து இருக்கிறார்.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர்  டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியிருப்பது என்னவென்றால்...,

"தயவுசெய்து இந்த கொரோனா வைரஸ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். இது உலக அளவில் உங்களிடம்  வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது.தயவுசெய்து கொரோனாவை  அரசியல்மயமாக்குவதைத் தவிர்த்திடுங்கள். இந்த ஆபத்தான வைரஸைத் தோற்கடிக்க நாட்டின் ஒற்றுமை மிக முக்கியமானதாக இருக்கும்.நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். நாங்கள் இரவும் பகலும் உயிர்களைக் காப்பாற்ற தொடர்ந்து பணி புரிந்து வருகிறோம் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

கொரோனா வைரஸ் போன்ற ஒரு புதிய மற்றும் தீவிரமான நோயை எதிர்கொள்ளும்போது இந்த அமைப்பு ஒரு நடவடிக்கைக்குப் பிறகு மதிப்பீடு செய்கிறது. பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் காண எங்கள் மதிப்பீட்டை நாங்கள் செய்கிறோம். உலக சுகாதார அமைப்பு தொற்றுநோயிலிருந்து உயிர் இழப்பு குறைப்புகளைக் கற்றுக்கொள்ள விரும்புகிறது". என விரிவாக விளக்கம் அளித்திருக்கிறார்.
 
PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!
அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..