பாஜகவின் சென்டிமெண்ட்.. காங்கிரசின் உள்குத்து... அனல் பறக்கும் 'பஞ்சாப்' தேர்தல் களம் !!

Published : Jan 11, 2022, 02:16 PM ISTUpdated : Jan 11, 2022, 02:18 PM IST
பாஜகவின் சென்டிமெண்ட்.. காங்கிரசின் உள்குத்து... அனல் பறக்கும் 'பஞ்சாப்' தேர்தல் களம் !!

சுருக்கம்

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. பிஜேபி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான அமரீந்தர் மற்றும் எஸ்ஏடி (சம்யுக்த்) ஆகிய லோக் காங்கிரஸ் கட்சி, “எல்லை மாநிலத்திற்கான பாதுகாப்பு” மற்றும் மத்திய அரசின் நிதி நிலை சம்பந்தப்பட்ட வாக்குறுதிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. 

சமீபத்தில் மோடியின் வருகையின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு பாஜகவின் பிரசாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூருக்கு பயணம் மேற்கொண்டபோது, விவசாயிகள் போராட்டம் காரணமாக மேற்கொண்டு செல்ல முடியாமல் டெல்லிக்கு திரும்ப நேர்ந்தது. இந்த பாதுகாப்பு குளறுபடி விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பஞ்சாப் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.

பஞ்சாப் தேர்தலை பற்றி கொஞ்சம் பின்னாடி பார்க்கலாம். முதலில் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங்கிற்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் உச்சமடைய, அமரிந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி கொண்டு வரப்பட்டார். பஞ்சாபில் சுமார் 30% தலித்துகள் உள்ளதால், அதே சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இப்படி பல சிரமங்களுக்கு இடையில் நேற்று யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. 

பிரபல சினிமா நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் மற்றும் பஞ்சாப் காங். கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இந்த சம்பவம் தான் நேற்றைய பிரேக்கிங் நியூஸ். அதுமட்டுமின்றி, மாளவிகா வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஏபிபி சி வோட்டர் சர்வேபடி பஞ்சாப்பில் இந்த முறை தொங்கு சட்டசபை உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. அங்கு ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கட்சி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து டெல்லி தலைமையின் முடிவுகளுக்கு எதிராக செயல்படுவதால் அங்கு பஞ்சாப் பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. ஆம் ஆத்மி அதிக இடங்களை வென்றாலும் மெஜாரிட்டி கிடைப்பதில் சிக்கல் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் காங்கிரஸ் கட்சி 37-43 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி தொடர்வது கொஞ்சம் சந்தேகம்தான். அமரீந்தர் சிங் போனது அக்கட்சி பெரிய பின்னடைவாகும் என்று கூறப்படுகிறது. குறைந்த இடங்களை வென்றாலும் சிரோன்மணி அகாலிதளம் கிங் மேக்கராக மாறும் வாய்ப்புகள் உள்ளன. அந்த கட்சிக்கு 17-23 இடங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. மொத்தத்தில் பஞ்சாப்பில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று விரைவில் தான் தெரியும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு