அட கடவுளே.. சென்னை விமான நிலையம் வந்த 27 பேருக்கு கொரோனா.. பீதியில் விமான பயணிகள்.

Published : Jan 11, 2022, 01:52 PM IST
அட கடவுளே.. சென்னை விமான நிலையம் வந்த 27 பேருக்கு கொரோனா.. பீதியில் விமான பயணிகள்.

சுருக்கம்

உடனே விமான நிலைய அதிகாரிகள் கொரோனா தொற்றுள்ள அந்த  27 பயணிகளின் விமான பயணத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். அப்போது அவர்களில் சிலா் வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று குணப்படுத்தி கொள்கிறோம் என்று கூறினா்.

வளைகுடா நாடுகளுக்கு செல்ல வந்த 27 பயணிகளுக்கு கொரோனா தொற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாளுக்கு நாள் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. டெல்டாவை காட்டிலும் ஒமைக்ரான் மூன்று மடங்கு அதி வேகமாக பரவக்கூடியது என்பதால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் அதிர்ச்சியில் உள்ளன. இந்நிலையில் கடந்த 200 நாட்களில் இல்லாத அளவிற்கு 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. சளி, இருமல் என்று மருத்துவமனைக்கு செல்பவர்களில் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நிலை உள்ளது.

காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் உள்ளவர்களும் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  குறிப்பாக முதல் அலை, இரண்டாவது அலை,  மூன்றாவது அலை என எத்தனை அலைகள் வந்தாலும் தடுப்பூசி மட்டுமே அதில் இருந்து பாதுகாக்கும் ஒரே ஆயுதம் என்பதால் நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முதல் தவணைத் தடுப்பூசியும்,  60 சதவீதத்தினர் இரண்டாவது தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர்.

இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது தொற்றினால் பாதிக்கப்படுதல் மற்றும் அதன் தீவிரத் தன்மையை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம் தமிழகத்தில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பன்னாட்டு  விமான நிலையத்தில் இருந்து துபாய் உள்பட வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானத்தில் ஏறுவற்கு 6 மணி பேரத்திற்கு ரெபிட் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்றுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து சாா்ஜா, துபாய் உள்பட வளைகுடா நாடுகளுக்கு செல்ல வந்தவா்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது விடுமுறை முடித்து  வேலைக்காக செல்ல வந்த 27 பேருக்கு ரெபிட் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

உடனே விமான நிலைய அதிகாரிகள் கொரோனா தொற்றுள்ள அந்த  27 பயணிகளின் விமான பயணத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். அப்போது அவர்களில் சிலா் வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று குணப்படுத்தி கொள்கிறோம் என்று கூறினா். ஆனால் விமான நிலைய அதிகாரிகள் அதை ஏற்று கொள்ளவில்லை. கொரோனா தொற்று பாதிப்பிற்குள்ளான 27 பேரையும் ஆம்புலன்ஸ்களில் ஏற்றி சென்னை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வாா்டுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அரசு மருத்துவமனையில் இந்த 27 பேருக்கும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இவா்களுக்கு ஏற்பட்டுள்ளது டெல்டா வைரஸ்சா? அல்லது ஒமிக்ரான் வகையை சோ்ந்ததா? என்பதை கண்டறிய பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அது வரை அவர்கள் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருப்பாா்கள் என்று  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த சில தினங்களாக ரெபிட் பரிசோதனையில் 100க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு தொற்று என கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!