யார் இந்த கரூர் கம்பெனி? கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்கு பலம் வாய்ந்தவர்கள் யார்? நாராயணன் திருப்பதி

By vinoth kumar  |  First Published Feb 13, 2023, 7:32 AM IST

யார் இந்த கரூர் கம்பெனி? இந்த நிறுவனத்தின் பின்னணியில் யார்? கொலை மிரட்டல் விடும் அளவிற்கு பலம் வாய்ந்தவர்கள் யார்? குடி குடியை கெடுக்கும் என்று சொல்கிறது அரசு. 


கரூர் கம்பெனியிலிருந்து வருகிறோம்' பணம் கொடு என்று சில ரௌடிகள் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டிடுவதாக காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கரூர் கம்பெனியிலிருந்து வருகிறோம்' பணம் கொடு என்று சில ரௌடிகள் டாஸ்மாக் ஊழியர்களை பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுப்பதாகவும், டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும் டாஸ்மாக் தொழிலாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அமெரிக்காவில் தமிழருக்கு கிடைத்த மாபெரும் கவுரவம்.. இது என் வாழ்நாள் வரம்! பாஜக SG சூர்யா நெகிழ்ச்சி..!

காவல் துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சாராய விற்பனையில் கடும் மோசடி நடப்பதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். இது குறித்து புகார் தெரிவிப்பவர்களை, பணம் கொடுக்க மறுப்பவர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம். கோவையில் அனுமதி வாங்கி போராட்டம் நடத்திய ஊழியர்களை காவல் துறை மேலிடத்தின் உத்தரவின் பேரில் கைது செய்துள்ளது.

யார் இந்த கரூர் கம்பெனி? இந்த நிறுவனத்தின் பின்னணியில் யார்? கொலை மிரட்டல் விடும் அளவிற்கு பலம் வாய்ந்தவர்கள் யார்? குடி குடியை கெடுக்கும் என்று சொல்கிறது அரசு. 

அந்த குடியை கொடுக்கும் அரசு துறை ஊழியர்களின் குடியை கெடுக்கும் தீய சக்திகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தான் இதன் பின்னணியில் உள்ளதாக நேரடியாக குற்றம் சாட்டுகிறார்கள் டாஸ்மாக் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள்.

இதையும் படிங்க;-  மக்களவையில் மத்திய பாஜக அரசை விமர்சித்த எம்.பி. கனிமொழி... நாராயணன் திருப்பதி டிவிட்டரில் பதிலடி!!

திமுக அரசின் ஊழல் முறைகேடுகள் தொடர்கின்றன. இளம் விதவைகளை அதிகமாக்கும் மது விற்பனையிலும் ஊழல், முறைகேடுகளை செய்வது தான் திராவிட மாடல் அரசா? கரூர் கம்பெனியை கண்டுபிடித்து ரௌடிகளை கைது செய்ய வேண்டியது காவல் துறையின் கடமை. இல்லையேல் 'குடி' மக்கள் பார்த்து கொள்வார்கள் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

click me!