முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு யார் வாரிசு..! பரபரப்பாக தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.!!

By T BalamurukanFirst Published May 27, 2020, 9:04 PM IST
Highlights

ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசுகள் யார் என்று நீதிமன்றம் முற்றுப்புள்ள வைத்துள்ளதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசுகள் யார் என்று நீதிமன்றம் முற்றுப்புள்ள வைத்துள்ளதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களை சந்தித்தார்.

"அண்ணன் மகனும், அண்ணன் மகளும் இரண்டாம் நிலை வாரிசு என்று திட்டவட்டமாக உயர்நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த "வேதா இல்லம்" நினைவிடமாக மாற்ற மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய சொல்லி உள்ளது. அதற்கு பதில் அளித்த தீபா, மெமொரியல் உருவாக்குவதால் மக்களுக்கு என்ன பயன் என்பதை நீதிபதிகள் பட்டியிலிட்டுள்ளனர்.
இறுதியாக சொல்லக்கூடியது என்னவென்றால் இதற்கும் மேலாக இப்படி ஒரு அநியாயமாக செயலை செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து அவர் கூறுகையில்,சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருப்பது, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. ஜெயலலிதா சொத்து தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நாங்களே வாரிசு என்பது உறுதியாக உள்ளது. தீர்ப்பும் அவசர சட்டமும் முரணாக உள்ளது. அவரச சட்டம் செல்லாது.

 மேல்முறையீடு செல்ல நானும் தீபக்கும் முடிவு செய்துள்ளோம். சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்வோம். அதன்பிறகே "போயஸ் தோட்டம்" செல்வோம்.எனக்கும் தம்பிக்கும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு தர நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நாங்கள் தான் சட்டப்பூர்வ வாரிசு என நீதிமன்றமே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்கள், நம்பிக்கையை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

click me!