அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? ஆளுநரை சந்திக்கும் முதல்வர் எடப்பாடி... முற்றுப்புள்ளி வைக்கிறாரா.. ஆளுநர்.. !

By T BalamurukanFirst Published Oct 5, 2020, 7:59 AM IST
Highlights

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 3 அமைச்சர்கள்  அடுத்தடுத்து சந்தித்துள்ளது தற்போதைய அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 3 அமைச்சர்கள்  அடுத்தடுத்து சந்தித்துள்ளது தற்போதைய அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

   அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற குழப்பம் கட்சிக்குள் எழுந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக கடுமையான விவாதங்கள் நடைபெற்றன.இதையடுத்து அக்டோபர் 7-ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனிக்குச் சென்று, அங்கு தனது இல்லத்தில் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் தொடர் சந்திப்பு மற்றும் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

அதேபோல் சென்னையில் முதல்வரும் தனது ஆதரவாளர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.இந்தநிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மூத்த அமைச்சர்கள் மூவர் அடுத்தடுத்து சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அடுத்தடுத்து 3 அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது. முதலில்  அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செங்கோட்டையன் சந்தித்த நிலையில் தற்போது அமைச்சர் வேலுமணியுடன் சந்திப்பு நடைபெற்று வருகிறது.அதேசமயம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடாப்படி பழனிசாமி கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று சந்திக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பல்வேறு அதிர்ச்சிகளோடு காத்திருக்கின்றனர் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கட்சித்தொண்டர்கள்.தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து ஆளுநருடன் கலந்து பேசுவார் முதல்வர் என்று சொல்லப்பட்டாலும் முதல்வர் வேட்பாளர் குறித்து டெல்லி கொடுத்த உத்தரவு பற்றி ஆலோசிக்கப்படும் என்றே தெரிகிறது என்கிறார்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள்.

click me!