அராஜகத்தின், சர்வாதிகாரத்தின், எதேச்சதிகாரத்தின் ஆட்சி தான் உத்தரப்பிரதேச மாநிலம்... மு.க.ஸ்டாலின் ஆவேசம்..!

By vinoth kumarFirst Published Oct 4, 2020, 4:01 PM IST
Highlights

ஹாத்ரஸ் வன்கொடுமையை கண்டித்து நாளை மாலை 5 மணியளவில் ஆளுநர் மாளிகையை நோக்கி திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் பேரணி நடைபெற உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஹாத்ரஸ் வன்கொடுமையை கண்டித்து நாளை மாலை 5 மணியளவில் ஆளுநர் மாளிகையை நோக்கி திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் பேரணி நடைபெற உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- உத்தரப்பிரதேச அரசு தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். ராகுல் காந்தியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இதனைச் செய்ய மத்திய அரசு, உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிடவேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் அரசியல் நிகழ்வுகள் மாபெரும் கொடூரங்களாக நடக்கின்றன. 

சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத்தின் ஆட்சி, மக்களின் ஆட்சி என்பது மறைந்து அராஜகத்தின் ஆட்சி, சர்வாதிகாரத்தின் ஆட்சி, எதேச்சதிகாரத்தின் ஆட்சி தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடக்கிறது'' என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருந்திருக்க வேண்டிய உத்தரப்பிரதேச பாஜக அரசு, எதிர்மறையாக நடந்து கொண்டுள்ளது. உடல் எரியூட்டப்பட்ட பிறகு பேட்டியளித்த காவல்துறை அதிகாரி, அப்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை என்று பேட்டி அளித்துள்ளார். குற்றவாளிகளைக் காப்பாற்ற இதைவிடப் பெரிய காரியம் எதுவும் செய்யவேண்டியதில்லை. கண்துடைப்புக்காகச் சிலரைக் கைது செய்துவிட்டு, அவர்கள் தப்பிக்கும் பாதையையும் உத்தரப்பிரதேச காவல்துறை செய்து கொடுத்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச்  சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல்காந்தியையும், பிரியங்கா காந்தி அவர்களையும் அனுமதிக்காமல் உ.பி. காவல் துறையினர் தடுத்துள்ளார்கள். மேலும் இதில் ராகுல்காந்தியை கீழே தள்ளியுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று உ.பி. முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கையில் சொல்லி இருந்தேன்.பொதுவாகவே சிறுபான்மையினர், பெண்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் பாதுகாப்பு என்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில் கேள்விக்குறியாகி வருகிறது. ஊடகங்களும் பாதுகாப்பின்மையை உணர்கின்றன. 

இதனைச் சரி செய்து, அனைவர் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. இதனை வலியுறுத்தி தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த உணர்வுகளை மத்திய அரசுக்குத் தமிழக ஆளுநர் எடுத்துச் சொல்லவேண்டும். அதற்காகவே இந்தப் பேரணி. இதில் திமுக தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும்'' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

click me!