
காங்கிரஸ் அரசின் கொத்தடிமைகளாக இருந்துகொண்டு தங்களை பாஜகவின் அடிமைகள் என விமர்சிப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினை தெர்மாகோல் புகழ் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவிடம் தமிழகத்தை தற்போதைய அரசு அடமானம் வைத்துவிட்டதாகவும் பாஜகவின் அடிமைகளாக அதிமுக அரசு இருப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் மதுரையில் நடந்த அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, காங்கிரசுக்கும் சோனியா காந்திக்கும் கொத்தடிமைகளாக திமுக இருந்துகொண்டு தங்களை பாஜகவின் அடிமைகள் என கூறுவதாக விமர்சித்துள்ளார்.
ஒருவரை ஒருவர் அடிமை எனக் கூறிக்கொள்வதன் மூலம் இரண்டு கட்சிகளுமே யாரோ ஒருவருக்கு அடிமையாக இருப்பதை நிரூபிக்கின்றனர்.