இந்த ஆட்சி மணல் கொள்ளையர் கையிலா?’ என கேட்ட ஸ்டாலினை வெளுத்தெடுக்கும் ஆளுங்கட்சி: பழனிசாமியும், ஆறுமுகசாமியும் வெண்ணைய் வித்தா சம்பாதிச்சாங்க?

By Vishnu PriyaFirst Published Oct 1, 2019, 3:49 PM IST
Highlights

ஸ்டாலினுக்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கும் ஓ.எம்.ஜி. டீமின் கட்டளையோ என்னவோ, கடந்த சில காலமாக எதிர்கட்சிகளின் மீது அவர் வைக்கும் விமர்சன வார்த்தைகள் கடும் வீரியமாக இருக்கின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் பா.ம.க.வின் தலைமையை பார்த்து கேட்ட ‘வெட்கம் இருக்குதா, ரோஷம் இருக்குதா?’ எனும் வார்த்தைகளாகட்டும்! பிரதமர் மோடியை பார்த்து சொன்ன ‘சாடிஸ்ட்’ எனும் சாடலாகட்டும்! எல்லாமே மிக தீவிரமானதாகவே பார்க்கப்படுகின்றன. 

ஸ்டாலினுக்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கும் ஓ.எம்.ஜி. டீமின் கட்டளையோ என்னவோ, கடந்த சில காலமாக எதிர்கட்சிகளின் மீது அவர் வைக்கும் விமர்சன வார்த்தைகள் கடும் வீரியமாக இருக்கின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் பா.ம.க.வின் தலைமையை பார்த்து கேட்ட ‘வெட்கம் இருக்குதா, ரோஷம் இருக்குதா?’ எனும் வார்த்தைகளாகட்டும்! பிரதமர் மோடியை பார்த்து சொன்ன ‘சாடிஸ்ட்’ எனும் சாடலாகட்டும்! எல்லாமே மிக தீவிரமானதாகவே பார்க்கப்படுகின்றன.

இந்த நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் எழுப்பியிருக்கும் ஒற்றைக் கேள்வியானது ஒரு பூகம்பத்தையே கிளப்பியுள்ளது. அதாவது “தமிழகத்தில் சமூக விரோதிகளின் அராஜகம் பெருகிவிட்டது. ‘இது முதல்வர் லாரி’ என்று மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்திற்கு, இ.பி.எஸ். பெயரை பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு எங்கு இருக்க முடியும்? இந்த ஆட்சி யார் கையில் இருக்கிறது? இ.பி.எஸ். கையிலா அல்லது மணல் கொள்ளையர்கள் கையிலா? தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா அல்லது குற்றத்தின் ஆட்சியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த கேள்வியானது எடப்பாடியாரின் கெளரவத்தை அநியாயத்துக்கு சீண்டிவிட்டது. விளைவு அவர் சில பாயிண்டுகளை எடுத்துக் கொடுக்க, ஸ்டாலினை வெச்சு செய்ய துவங்கிவிட்டனர் அ.தி.மு.க. இணைய தள விங் டீமினர். 
அதில் ஹைலைட்டானவற்றின் தொகுப்பு இதோ!....
*    மணல் கொள்ளை பற்றி பேச தி.மு.க.வுக்கு ஏது தகுதி? உங்கள் கட்சியின் அசைக்க முடியாத அதிகார மையமா இருந்த கரூர்  பழனிசாமி செய்து கொண்டிருந்த பிஸ்னஸ் என்ன? கரூர் துவங்கி பல கிலோமீட்டர்களுக்கு காவிரியாற்றில் மணல் அள்ளாமல் வேறு எதை அள்ளி கோடிக் கோடியாய் சம்பாதித்தார் அவர்?

*     கோயமுத்தூரை சேர்ந்த ஓ.ஆறுமுகசாமியை ‘மணல் மாஃபியா’ என்றே பத்திரிக்கைகள் வர்ணிக்கின்றன. அவர்  உங்கள் கட்சியின் ஆதரவாளர்தானே! கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ,கரூர் என உங்கள் கட்சியின் நான்கைந்து மாவட்டங்களின் பண தேவைக்கு இவர்தானே ஸ்பான்சர் செய்தார். ஆக கரூர் பழனிசாமியும், ஓ.ஆறுமுகசாமியும் என்ன காவிரி ஆற்றின் கரையோரம் வெண்ணெய் வித்தா சம்பாதித்து உங்கள் கட்சிக்கு அழுதார்கள்? 

*    இவ்வளவு ஏன், புரட்சித் தலைவி அம்மாவால் குண்டாஸில் போடப்பட்ட லாட்டரி மார்ட்டினும் உங்கள் கட்சியின் ஃபைனான்ஸியர் தானே. பெரும் குற்ற ப்ரொஃபைலை வைத்திருக்கும் அந்த நபரை செம்மொழி மாநாட்டு குழுவில், கேவலம் பணத்துக்காக போட்ட நீங்களெல்லாம் அரசாங்கம் நடத்துவது பற்றி பேசலாமா? என்று கேட்டுள்ளனர். 

என்ன சொல்ல போகுது தி.மு.க?

click me!