போலீஸில் சிக்காமல் இருக்க தனக்கு உதவியது யார் யார்..? ராஜேந்திர பாலாஜி பகீர் வாக்குமூலம்.. அலறும் அதிமுக..!

Published : Jan 05, 2022, 05:57 PM ISTUpdated : Jan 05, 2022, 06:28 PM IST
போலீஸில் சிக்காமல் இருக்க தனக்கு உதவியது யார் யார்..? ராஜேந்திர பாலாஜி பகீர் வாக்குமூலம்.. அலறும் அதிமுக..!

சுருக்கம்

தனக்கு 2 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் உதவியதாக காவல்துறையிடம் ராஜேந்திர பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தான் தலைமறைவாக இருந்தபோது தனக்கு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இரண்டு பேர் உதவி செய்ததாக ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளதால் அதிமுகவினர் கலக்கமடைந்துள்ளனர்.  

 

ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து தேடி வந்தது. கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டு தேடும் பணியில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்து உதவி செய்ததாக திருப்பத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கியிருக்கலாம் என தனிப்படை அங்கும் விரைந்தது. எனினும் அவரை பிடிக்க முடியவில்லை.

இதனிடையே ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமின் பெற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்திருந்தது. ராஜேந்திர பாலாஜி வெவ்வேறு சிம்கார்டுகளை பயன்படுத்தி, வழக்கறிஞரை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், ராஜேந்திர பாலாஜி பதுங்கி இருப்பதாக சந்தேகப்படும் இடங்களுக்கு தனிப்படை விரைவதற்கு முன்பாகவே அவருக்கு தகவல் கசிந்துவிடுவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஜி.பி.எஸ். கருவி மூலம் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டுபிடித்த தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் கைது செய்தனர். ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளநிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காவி வேட்டி, டி-சர்ட் அணிந்து சாலையில் சென்று கொண்டிருந்தபோது ராஜேந்திர பாலாஜியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அழைத்து வரப்படுகிறார் ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

 

ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்க உதவிய பாஜக நிர்வாகியும் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி தொகுதி பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். ராமகிருஷ்ணன் உறவினர் நாகேஷ் தான் காரில் அழைத்து வந்துள்ளார். அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன் கணேசன், விருதுநகர் மாவட்ட தொழில் நுட்பப்பிரிவை சேர்ந்த பாண்டியராஜன், பாஜக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் உறவினர் நாகேஷன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தனக்கு 2 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் உதவியதாக காவல்துறையிடம் ராஜேந்திர பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த அமைச்சர்கள் யார் யார் என்கிற விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை. 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!