சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம்... மாநகராட்சி ஆணையர் பகீர் தகவல்..!

By Thiraviaraj RMFirst Published Apr 14, 2021, 11:04 AM IST
Highlights

கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால், வீடு தேடிவரும் தன்னார்வலர்களிடம் தயக்கம் இல்லாமல் தொற்று அறிகுறி இருந்தால் கூறுங்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால், வீடு தேடிவரும் தன்னார்வலர்களிடம் தயக்கம் இல்லாமல் தொற்று அறிகுறி இருந்தால் கூறுங்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது. தேனாம்பேட்டை மண்டலத்தில் 2,109, அண்ணாநகர் மண்டலத்தில் 2,037 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் கொரோனா காய்ச்சல் முகாம்கள் நடத்தி வருகிறோம். வீடுகள்தோறும் சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது. வீடு தேடிவரும் தன்னார்வலர்களிடம் தயக்கம் இல்லாமல் தொற்று அறிகுறி இருந்தால் தெரிவிக்கவும். தண்டையார்பேட்டை யில் 1, 666 , தண்டையார்பேட்டை 1,260, ராயபுரம் 1,698, திருவிக நகரில் 1,529, அம்பத்தூர் 1,314, கோடம்பாக்கம் 1,708 ,வளசரவாக்கம் 1,036, அடையாறு 1,155, திருவெற்றியூர் 462 ,மணலி 194 ,மாதவரம் 716 ,ஆலந்தூர் 849 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

பெருங்குடி மண்டலத்தில் 929 சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 443 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்னும் 15 லட்சம் கொரோனா தடுப்பூசி உள்ளதால், தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எந்தவித அறிகுறியும் இல்லாமலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுகிறது. அடுத்த மூன்று நாட்களுக்குள் சென்னையில் 400 காய்ச்சல் முகாம்களை அமைக்கிறோம். சென்னையில் 12 ஆயிரம் தன்னார்வலர்கள் தடுப்பூசி விழிப்புணர்வு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 45 வயதிற்கு மேற்பட்டோர் தயக்கமில்லாமல் பயமில்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்த முன் வரவேண்டும்”என்று தெரிவித்துள்ளார்.

click me!