எங்க தொகுதிக்கு வந்துடாதீங்க... சாமியைக் கும்பிடும் உடன்பிறப்புகள்..!

Published : Nov 23, 2020, 06:00 PM IST
எங்க தொகுதிக்கு வந்துடாதீங்க... சாமியைக் கும்பிடும் உடன்பிறப்புகள்..!

சுருக்கம்

2021 தேர்தலில் மீண்டும் உடுமலை, மடத்துக்குளம் அல்லது காங்கேயம் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறார். 

தி.மு.க., ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக 'பவர்புல்'லாக வலம் வந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன். இவரது தொகுதியான வெள்ளக்கோவில், தொகுதி சீரமைப்பு காரணமாக காணாமல் போய் விட்டது. இதனால், 2016 தேர்தலில் புதிதாக உருவான, மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிட்டார். உள்ளூர் கட்சியினரை நம்பாமல், சொந்தக்காரர்களை நம்பி, தேர்தல் வேலைகளை ஒப்படைத்ததால் தோற்று விட்டார்.

2021 தேர்தலில் மீண்டும் உடுமலை, மடத்துக்குளம் அல்லது காங்கேயம் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறார். நமது தொகுதி பக்கம் அவர் வராமல் இருக்க வேண்டும் என உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், 'சீட்' கனவில் இருக்கிற தி.மு.க.,வினர், தங்களுக்கு வேண்டிய சாமிகளை கும்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

உதயநிதிக்காக தனது இளைஞரணி செயலாளர் பதவியை விட்டுக் கொடுத்தவர்தான் இந்த வெள்ளக்கோயில் சாமி நாதன். அவருக்கே இப்படியொரு நிலைமையா? என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்