தன்னை நம்பி வந்த மாணவர்களுக்காக ஸ்டாலின் செய்ய காரியம்.. சைலண்டாக ஸ்கோர் செய்யும் திமுக.

Published : Nov 23, 2020, 04:34 PM IST
தன்னை நம்பி வந்த மாணவர்களுக்காக ஸ்டாலின் செய்ய காரியம்.. சைலண்டாக ஸ்கோர் செய்யும் திமுக.

சுருக்கம்

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தும் கல்வி கட்டணம் செலுத்தமுடியாமல் திரும்பி சென்ற மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று  முதலமைச்சருக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தும் கல்வி கட்டணம் செலுத்தமுடியாமல் திரும்பி சென்ற மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று  முதலமைச்சருக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பு படிப்பதற்கான ஆணைப் பெற்றவர்கள் சிலருக்கு அரசு மருத்துவக் கல்லூரியிலும் தனியார் மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. 

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் சேரக்கூடிய அவர்களுக்கான கல்வி கட்டணத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் .இதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை தமிழக அரசு  தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரக்கூடிய அவர்களுடைய கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்று அறிவித்தது. ஆனால் தமிழக அரசு  அறிவிப்புக்கு முன்பாக தனியார் மருத்துவக் கல்லூரியில் கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்வி தொகை கட்ட முடியாமல் சென்ற மாணவர்களுக்கும்  கல்விக் கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்ள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்  திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

 

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் எழுதிய கடிதத்தில், மறுகலந்தாய்வு நடத்தி மருத்துவ கல்லூரியில் சேர்ப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியறுத்தியுள்ளார். இந்த கடிதத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர் பாபு ஆகியோர் முதல்வரை அலுவலத்தில் வழங்கினர்.

 

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு ஓட்டு போடலனா சாப்பாட்டுல விஷம் வச்சிடுவேன்..! குடும்பத்தையே மிரட்டும் தீவிர ரசிகை!
இந்தியாவுக்கு எதிராக சதி... ஒரே அடியில் பாடம் கற்றுக்கொடுக்கணும்..! யூனுஸ் அரசுக்கு எதிராக எடுக்க வேண்டிய ஐந்து நடவடிக்கைகள்..!