பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலம் சட்டத்தில் திமுக எங்கு தேடினாலும் ஓட்டையை கண்டுபிடிக்க முடியாது.!

By Thiraviaraj RMFirst Published Mar 14, 2020, 8:19 AM IST
Highlights

 அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஏதேதோ துருவி துருவி கேட்கிறீர்கள்.இன்றைக்கு டெல்டா பகுதிகளை பாதுகாப்பட்ட வேளாண் மண்டலமாக எங்களுடைய அரசு அறிவித்துள்ளது. நீங்கள் எப்படி தேடித்தேடி பார்த்தாலும் எந்த ஓட்டையும் இருக்காது என்பதை திமுக விற்கு தெளிவுபடுத்திகொள்கிறேன்.

T.Balamurukan

 அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஏதேதோ துருவி துருவி கேட்கிறீர்கள்.இன்றைக்கு டெல்டா பகுதிகளை பாதுகாப்பட்ட வேளாண் மண்டலமாக எங்களுடைய அரசு அறிவித்துள்ளது. நீங்கள் எப்படி தேடித்தேடி பார்த்தாலும் எந்த ஓட்டையும் இருக்காது என்பதை திமுக விற்கு தெளிவுபடுத்திகொள்கிறேன்.

சட்டசபையில் நேற்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலம் குறித்து சில சந்தேகங்களை தெரிவித்தார். அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.., "இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி விவசாயம் சார்ந்த பொருட்கள் மீது சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசிற்கு முழுமையாக உள்ளது. அந்த அடிப்படையில் தான் இதை கொண்டு வந்தோம். அதில் முழுமையாக சட்டப் பாதுகாப்பு கொடுத்திருக்கிறோம். எங்கள் அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஏதேதோ துருவி துருவி கேட்கிறீர்கள்.

நாடாளுமன்றத்திலே கூட இந்த சட்டம் குறித்து பேசிப் பார்த்தீர்கள். சம்பந்தப்பட்ட துறை மத்திய மந்திரியே தெளிவுப்படுத்தி விட்டார். மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்கின்றது. மாநில அரசாங்கத்திற்கு உள்ள உரிமையின் அடிப்படையில் செயல்படலாம் என்று கூறியிருக்கிறார்.இந்த சட்டத்தை பொறுத்தவரைக்கும் முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து இன்றைக்கு டெல்டா பகுதிகளை பாதுகாப்பட்ட வேளாண் மண்டலமாக எங்களுடைய அரசு அறிவித்துள்ளது. நீங்கள் எப்படி தேடித்தேடி பார்த்தாலும் எந்த ஓட்டையும் இருக்காது என்பதை தெளிவுப்பட தெரிவித்துக் கொள்கிறேன்".

click me!