2021 ல நான் தான் முதலமைச்சர், திருச்செந்தூர் முருகன் மீது சத்தியம் செய்திருக்கும் நடிகர் வடிவேல்.!!

Published : Mar 13, 2020, 09:27 PM ISTUpdated : Mar 13, 2020, 09:28 PM IST
2021 ல நான் தான் முதலமைச்சர்,  திருச்செந்தூர் முருகன் மீது சத்தியம் செய்திருக்கும் நடிகர் வடிவேல்.!!

சுருக்கம்

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த நடிகர் வடிவேலு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், “ரஜினி சார் அரசியலுக்கு வருவாரா என்று உங்களுக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. ஏன், அவருக்கே தெரியாது. அவர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்,” என்றார் கிண்டலாக.

T.balamurukan
நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு சினிமாவில் காமெடி செய்து வந்த வடிவேலு, நானும் அடுத்த சிஎம்னு சொல்லியிருப்பது ரஜினியை கிண்டலடித்திருக்கிறார் வடிவேலு. அரசியல் எதிர்காலத் திட்டம் குறித்து 3திட்டத்தை அறிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.இந்த நிலையில், நடிகர் வடிவேலு, ‘வரும் 2021 ஆம் ஆண்டு நான் சி.எம் ஆகலாம்னு பிளான் பண்ணியிருக்கேன்,' என்று தெரிவித்துள்ளார். 

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த நடிகர் வடிவேலு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், “ரஜினி சார் அரசியலுக்கு வருவாரா என்று உங்களுக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. ஏன், அவருக்கே தெரியாது. அவர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்,” என்றார் கிண்டலாக.

தொடர்ந்து அவர், “2021 ஆம் ஆண்டு நான் சி.எம் ஆகலாம்னு பிளான் பண்ணியிருக்கேன். நான் எலெக்‌ஷன்ல நின்னா நீங்கல்லாம் ஓட்டுப் போடுவீங்கள்ள. அப்ப நான்தான் தமிழ்நாடு முதலமைச்சர்னு,” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். 
காமெடி நடிகர்களுக்கும் கட்சி, கொடி, முதல்வர் பதவி என கனவு காணத்தொடங்கியிருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசியல் கட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கிறது. ஊர்களில் கொடிகம்பம் நட்டுவைப்பதற்கே இடமில்லாமல் அடிதடி பிரச்சனை ஏற்பட்டுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் வடிவேலு வேற கட்சி ஆரம்பிக்க போறாராம்.!

PREV
click me!

Recommended Stories

அரசு ஊழியர்களுக்கு குஷி.. ரூ.3000 பொங்கல் போனஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!