டெல்லி எம்.எல்.ஏக்கள் 61 பேருக்கு பிறப்பு சான்றிதழ் இல்லையாம்.! அப்ப நாங்க எல்லாம் முகாமுக்கு போகனுமா? ?

By Thiraviaraj RMFirst Published Mar 13, 2020, 8:31 PM IST
Highlights

டெல்லி சட்டமன்றத்தில் என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிரான தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது, டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மொத்தமுள்ள 70 எம் எல் ஏக்களில் 61 எம்.எல்.ஏக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லையென்பது தெரியவந்ததுள்ளது.

T.Balamurukan

இதுகுறித்து முதலமைச்சர் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.., " என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் என்.பி.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. என்னிடமும் பிறப்புச் சான்றிதழ் இல்லை. எனது குடும்பத்தினரிடமும் ஆவணங்கள் கிடையாது. நான், எனது மனைவி, எனது அமைச்சரவை உறுப்பினர்களிடத்திலும் குடியுரிமையை நிரூபிப்பதற்கான பிறப்புச் சான்றிதழ் கிடையாது. நாங்கள் எல்லோரும் அகதிகள் முகாமுக்கு அனுப்பப்படுவோமா?
இந்த என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். டெல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் யார்., யாரிடமெல்லாம் பிறப்புச் சான்றிதழ் உள்ளதென வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 9 பேரிடம் மட்டுமே பிறப்புச் சான்றிதழ் இருப்பது தெரியவந்தது. 

முஸ்லிம்களை என்.பி.ஆர்., என்.ஆர்.சி. குறி வைத்துள்ளதாக கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றது.டெல்லி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 'என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. ஆகியவை அச்சமான சூழலை உருவாக்கியுள்ளது. தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க முடியாமல் போனால் தாங்கள் அகதிகள் முகாமுக்கு அனுப்பப்படுவோம் என மக்கள் அச்சப்படுகின்றனர். நாட்டில் 90 சதவீதம்பேரிடம் மத்திய அரசு கேட்கும் சான்றிதழ்கள் கிடையாது.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!