இந்திய பாராளுமன்றத்தை மிரட்டும் கொரோனா...!! விரைவில் முடித்துக் கொள்ள சபாநாயகர் ஆலோசனை..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 13, 2020, 6:08 PM IST
Highlights

அதாவது அடுத்த மாதம் 3 தேதி வரை பாராளுமன்றத்தை  நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ,  வைரஸ் அச்சத்தால் முன்கூட்டியே அவை நடவடிக்கைகளை முடிக்க சபாநாயகர் ஆலோசனை நடத்தி வருகிறார் .

கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டுள்ளதால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை  முன்கூட்டியே முடித்துக்கொள்ள  சபாநாயகர் ஆலோசனை நடத்தி வருகிறார் .  சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் இருந்து வருகிறது .  இந்நிலையில் இந்தியாவில் சில தினங்களாக  கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  சுமார் 30 ஆயிரம் பேர் கொரோனா  கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்.

இந்த வைரஸை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது .  மாநில அரசுகளும் மருத்துவ பரிசோதனைகளை உடனுக்குடன் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .  பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது .  அதேபோல் மக்கள் அதிகமாக கூடும் திருமண நிகழ்ச்சிகள் ,  கோவில் திருவிழாக்கள் , மற்றும் பொது நிகழ்ச்சிகள் ரத்து  செய்யப்பட்டு வருகின்றன .  இந்நிலையில் கொரோனா  வைரஸ் அச்சத்தால் தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை விரைவில் முடித்துக் கொள்ளவும்  திட்டமிடப்பட்டுவருகிறது. 

அதாவது அடுத்த மாதம் 3 தேதி வரை பாராளுமன்றத்தை  நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ,  வைரஸ் அச்சத்தால் முன்கூட்டியே அவை நடவடிக்கைகளை முடிக்க சபாநாயகர் ஆலோசனை நடத்தி வருகிறார் .  அனைத்து கட்சி தலைவர்களுடன் இது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டு வருகின்றன ,  எனவே அடுத்த வாரம் மட்டும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் என்று தெரிகிறது .  வரும் 20ம் தேதியுடன் பாராளுமன்ற கூட்டத் தொடரை நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 

click me!