"திமுக ஆட்சியில் சிக்கன் குனியாவுக்கு நிலவேம்பு கொடுத்தாங்களே..." அப்ப எங்க போனாரு கமல்! ஜெயக்குமார் காட்டம்!

 
Published : Oct 20, 2017, 03:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
"திமுக ஆட்சியில் சிக்கன் குனியாவுக்கு நிலவேம்பு கொடுத்தாங்களே..." அப்ப எங்க போனாரு கமல்! ஜெயக்குமார் காட்டம்!

சுருக்கம்

Where was Kamal gone? Jayakumar

திமுக ஆட்சியில், சிக்குன் குனியாவுக்கு நிலவேம்பு கொடுத்தபோது நடிகர் கமல் ஹாசன் எங்கு போயிருந்தார் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

நிலவேம்பு குடிநீர் குறித்து நடிகர் கமல் ஹாசன், சில கருத்துக்களைக் கூறி இருந்தார். கமலின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என தமிழக அரசும் கூறியிருந்தது. 

இந்த நிலையில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிலவேம்பு குறித்த கருத்துக்களைத் தெரிவிப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடாதீர்கள் என்றும் மக்களைக் குழப்புகின்ற வேலையை யாரும் செய்ய வேண்டாம் என்றும் கூறினார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டோருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. அதன் மூலம் மக்கள்
பயனடைந்தார்கள். அப்போது, இதே கமல் ஹாசன் சென்னையில்தானே அப்போது இருந்தார். வேறு எங்கும் போயிருந்தாரா? என்று கேள்வி எழுப்பினார். 

அதிமுக ஆட்சியில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். கமல் ஹாசனின் இந்த அறிவிப்பின் பின்னணியில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் உள்ளதோ என்கிற ஐயம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநிர் சிறந்த தீர்வாக உள்ளது. மக்கள் இதனால் நிவாரணம் பெறும் நிலையில் தங்கள் வியாபாரம் அடிபட்டுப் போகிறதோ என்ற எண்ணத்தின் பின்னணியில் இருந்து அவர்கள் செயல்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!