மாநிலங்களவை தேர்தல் எப்போது நடக்கும்... தேதியை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்.!!

By T BalamurukanFirst Published Jun 1, 2020, 8:01 PM IST
Highlights

கொரோனா தொற்றால் மார்ச் மாதம் நடத்த வேண்டிய மாநிலங்களவை தேர்தல் தள்ளிப்போனது.தற்போது மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருவதால் தேர்தல் நடத்தவும் அனுமதி வழங்கியிருக்கிறது. இதன் அடிப்படையில இந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
 


கொரோனா தொற்றால் மார்ச் மாதம் நடத்த வேண்டிய மாநிலங்களவை தேர்தல் தள்ளிப்போனது.தற்போது மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருவதால் தேர்தல் நடத்தவும் அனுமதி வழங்கியிருக்கிறது. இதன் அடிப்படையில இந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் திருச்சி சிவா, ரங்கராஜன், முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, கே.செல்வராஜ் ஆகியோர் உள்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 55 எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்.,2-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து, காலியாகும் 55 இடங்களுக்கான தேர்தல் தேதியை கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பினால் மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதனால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, தேர்தலை நடத்திக் கொள்ளவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் அன்று மாலை 5மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

click me!