தூக்கமிழந்திருப்பதாக CM பேசும்போது சிரித்துக் கொண்டிருந்தது ஏன்..?? செய்தியாளர் கேள்வியால் டரியல் ஆன பொன்முடி.

By Ezhilarasan Babu  |  First Published Oct 12, 2022, 7:28 PM IST

அமைச்சர்களின் செயல்பாட்டால் தூக்கமிழந்துள்ளதாக முதலமைச்சர் ஆதங்கத்துடன் பேசியபோது நீங்கள் மட்டும் மேடையில் சிரித்துக் கொண்டிருந்தது ஏன் என அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் சொல்ல முடியாமல் கையில் சைகை காட்டி கோபத்துடன் புறப்பட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.


அமைச்சர்களின் செயல்பாட்டால் தூக்கமிழந்துள்ளதாக முதலமைச்சர் ஆதங்கத்துடன் பேசியபோது நீங்கள் மட்டும் மேடையில் சிரித்துக் கொண்டிருந்தது ஏன் என அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் சொல்ல முடியாமல் கையில் சைகை காட்டி கோபத்துடன் புறப்பட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. முதலமைச்சர் அமைச்சர்களுக்கு அறிவுரை கூறிய போது ,பொன்முடி மட்டும் மேடையில் நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. 

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அடுக்கடுக்கான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.  விலைவாசி உயர்வு பன்மடங்கு உயர்ந்து விட்டது என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க் கட்சி
கள் தீவிரமாக முன்வைத்து வருகின்றன.

Tap to resize

Latest Videos

இது ஒரு புறம் உள்ள நிலையில் திமுக அமைச்சர்கள் பொது இடங்களில் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. சமூபகாலமாக திமுக அமைச்சர்கள் பேச்சு மற்றும் செயல்பாடுகள் பொதுமக்களை முகம் சுளிக்கும் வகையில் இருந்து வருகிறது. குறிப்பாக  கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா போன்றோரின் பேச்சுக்கள் கடும் விமர்சனத்தை சம்பாதித்து உள்ளது. 

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மனு கொடுக்க வந்த பெண்ணை மனுவை பெற்று தலையில் அடித்தது,  மனு கொடுக்க வந்த பழங்குடியின சமூகத்தைச் சார்ந்த பிரதிநிதி இரனியன் என்பவருக்கு இருக்கை கொடுக்காமல் அவமரியாதை செய்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மகளீரின் பேருந்து பயணத்தை ஓசி என  பொதுக் கூட்ட மேடையில் பேசியது மகளிர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து கிராமசபை கூட்டத்தில் கேள்வி  கெட்ட பெண்ணை " ஏய் நீ உட்காரு.. அப்புறம் பேசு...  என அநாகரீகமாக பேசிய ஆணவ பேச்சு தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திமுக அமைச்சர்களின் ஆணவ பேச்சு மற்றும் செயல்பாடுகளை மக்கள் கண்டித்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில்  அமைச்சர்கள் அடுத்தடுத்து பொது மக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருவதை உணர்ந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்,  திமுக பொதுக்குழு கூட்டத்தில்  தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அமைச்சர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்,  பொது மக்களை இழிவு படுத்துவது போன்ற கண்ணியமற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது, ஒவ்வொரு நாளும் நான், நம் அமைச்சர்கள் எந்த பிரச்சனையும் செய்திருக்கக் கூடாதே என்ற அச்சத்துடன் தான் நான் விழித்து எழுகிறேன்,  என் உடம்பை பாருங்கள்,  அமைச்சர்களின் செயல்பாடுகள் என்னை தூக்கம் இழக்க வைத்துள்ளது, என ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். அப்போது மேடையில் இருந்த பல முன்னணி தலைவர்களும் நிசப்தமாயினர். ஆனால் அமைச்சர் பொன்முடி மட்டும் முதல்வரின் பேச்சை பொருட்படுத்தாமல் மேடையில் அமர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார். 

இது அங்கிருந்தவர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.  தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த பலரும் பொன்முடியை கடுமையாக விமர்சித்தனர். 

ஒரு முதலமைச்சர் அமைச்சர்களின் செயல்பாட்டால் நிம்மதி இழந்திருப்பதாக கூறுகிறார், ஆனால் மீது பொன்முடிக்கு கொஞ்சம்கூட கூச்சப்படாமல் இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறாரே என விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் இன்று பி.எட் கலந்தாய்வினை இன்று பொன்முடி தொடங்கி வைத்தார்.  அந்த நிகழ்ச்சிக்கும் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் முதல் முறையாக 4000 விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நியமிக்கப்பட இருப்பதாக கூறினார். 

அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர்,  சில அமைச்சர்களின் செயல்பாட்டால் தூக்கம் இழந்துள்ளதாக முதலமைச்சர் மேடையில் வேதனையுடன் பேசிக்கொண்டிருந்தார், ஆனால் அங்கு நீங்கள் மட்டும் மேடையில் சிரித்துக் கொண்டிருந்தது ஏன் என கேள்வி எழுப்பினார். உடனை கோபத்தில் உச்சத்திற்கே சென்ற பொன்முடி,  முகம் மாறி,  கண்கள் சிவந்து, பதிலேதும் கூறாமல் கைகளால் சைகை மட்டும் காட்டிவிட்டு வேகவேகமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவரின் இந்த செயல் செய்தியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
 

click me!