சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது எப்போது..? வெளியானது புதிய தகவல்..!

By Thiraviaraj RMFirst Published Jun 4, 2020, 10:47 AM IST
Highlights

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மதுக்கடைகள் திறக்கப்படாமல் உள்ளது. 

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மதுக்கடைகள் திறக்கப்படாமல் உள்ளது. 

சென்னையில் தற்போது கட்டுப்பாட்டு பகுதிகளில் வேகமாக பரவி வரும் நிலையில், வரும் ஜூன் மாதத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் கூறி வந்தன. தமிழகத்தில் 1,286 பேர், சென்னையில் மட்டும் 1,012 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, மொத்தம் 17,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலானதாக உள்ளது. முன்னதாக கொரோனா கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர். ஆனால் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் தற்போது டாஸ்மாக் கடைகளை சென்னையில் திறக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட கடைகளை மட்டும் நேரத்தை குறைத்து கடைகளை திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. 

click me!