நாட்டையே உலுக்கிய 2ஜி முறைகேடு வழக்கில் தீர்ப்பு எப்போது? இன்று அறிவிக்கிறது நீதிமன்றம்..!

Asianet News Tamil  
Published : Sep 20, 2017, 08:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
நாட்டையே உலுக்கிய 2ஜி முறைகேடு வழக்கில் தீர்ப்பு எப்போது? இன்று அறிவிக்கிறது நீதிமன்றம்..!

சுருக்கம்

When is the judgment in the 2G scam case in the country? Court declares today ..!

நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பு தேதியை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ளது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடந்துமுடிந்ததை அடுத்து 2ஜி முறைகேடு வழக்கின் தீர்ப்பு தேதியை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ளது. இந்த வாரத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் சோழவம்சத்தின் பெருமை..! வரலாற்றை அசிங்கப்படுத்திய ஒவைசி..!
விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!