#BREAKING தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.!

By vinoth kumarFirst Published Jun 1, 2021, 1:47 PM IST
Highlights

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 
 

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என உஅன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகியுள்ள நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. மே 3ம் தேதி தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில், கொரோனா அதிகரித்து வந்ததால் தேதி குறிப்பிடாமல் தேர்வை ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து கொரோனா குறைந்த பிறகு 12ம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். முதலமைச்சர் உடனான ஆலோசனையில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர்;- சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என மத்திய அரசு கூறியுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும். ஆன்லைன் வகுப்பு தொடங்கும் முன் பாடப்புத்தகம் தருவது பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும். அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிக்கு இணையாக விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

click me!