என்ன ஒரு மனசு.. தமிழகத்தையே மெய்சிலிர்க்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் வீடியோ..!

Published : Jun 01, 2021, 12:45 PM IST
என்ன ஒரு மனசு.. தமிழகத்தையே மெய்சிலிர்க்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் வீடியோ..!

சுருக்கம்

கடந்த 29ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் சென்னை விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, சென்னை-கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் முதல்வர் கார் சென்றபோது சைரன் சத்தத்துடன் ஆம்புலன்ஸ் ஒன்று அவசரம் அவசரமாக வந்துள்ளது.

சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு வழிவிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

பொதுவாகவே ஆம்புலன்ஸ் அவரச தேவைக்காக உயிர்காக்க செல்லும் வாகனம். ஆம்புலன்ஸ்ஸிற்கு வழிவிடும் தொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி போக்குவரத்து காவல் துறை எத்தனையோ வழிகளில் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதை எதையுமே வாகன ஓட்டிகள் கண்டுகொள்வது இல்லை.அதோடு ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளிகளுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஒரு சிலர் இது தான் சாக்கு என்று ஆம்புலன்ஸ் பின்னாடியே செல்வர்.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் சென்னை விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, சென்னை-கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் முதல்வர் கார் சென்றபோது சைரன் சத்தத்துடன் ஆம்புலன்ஸ் ஒன்று அவசரம் அவசரமாக வந்துள்ளது. அதைக் கண்ட முதல்வர் ஸ்டாலின், ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டுச் செல்லுமாறு டிரைவருக்கு உத்தரவிட்டுள்ளார். 

அதன் படி, டிரைவர் ஆம்புலன்ஸுக்கு வழிவிட முதல்வர் சென்ற காருக்கு முன் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. பின்னர், ஆம்புலன்ஸ் அந்த இடத்தை கடந்த பிறகு தனது பயணத்தை தொடர்ந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அதோடு முதல்வர் இந்த செயலை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!