1 முதல் 8ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published Sep 12, 2021, 12:41 PM IST
Highlights

 தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் பேசும் பொழுது இது என்னோட அரசு அல்ல நமது அரசு என்று கூறினார். நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும்போது அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு தமிழக பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தாக நீட் தேர்வு ரத்து செய்ய சொல்லி பேசியுள்ளதாக கூறினார். 

தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை திறப்பமு குறித்து 15ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்டதில் இருந்தே பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. 

இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்;- தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் பேசும் பொழுது இது என்னோட அரசு அல்ல நமது அரசு என்று கூறினார். நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும்போது அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு தமிழக பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தாக நீட் தேர்வு ரத்து செய்ய சொல்லி பேசியுள்ளதாக கூறினார். 

இன்று நடக்கும் நீட் தேர்வு தமிழகத்தில் கடைசி நீட் தேர்வாக இருக்குமா என்று கேட்டதற்கு, நீட் தேர்வு எதிர்த்து போராடுகிறோம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தமிழக முதல்வருக்கும் உள்ளது.  தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து வரும் 15ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார் என அன்பில் மகேஷ்  கூறியுள்ளார்.

click me!