
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் முதலமைச்சராக பதவிஏற்று கொண்டாலும் சசிகலாவே அதிகார மையமாக இருக்கிறார் என அதிமுக தொண்டர்கள் கூறி வருகிறார்கள்.
இதை ஒரு சிலர் ஏற்றுகொண்டாலும் ஏராளமானோர் இதை ஏற்க மறுத்து வருகின்றனர்.
அதே நேரத்தில் அதிகார மயத்திற்கு கட்டுப்பட்டு ஓபிஎஸ் நடந்து கொள்வாரா என்ற சந்தேகமும் கட்சியினர் மத்தியில் உள்ளது.
இந்நிலையில் ஜெவின் அண்ணன் மகள் தீபாவை அதிமுக தலைவராக்குவோம் என ஆடியோ ஒன்று வாட்சப்பில் பரபரப்பாக உலா வருகிறது.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் என கூறப்படும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆடியோ அதிமுகவினர் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
அதில் இதுநாள் வரை சசிகலா மற்றும் அவரை சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவை நம்பவைத்து நாடகமாடியுள்ளனர் என்றும் போயஸ் தோட்டத்தையோ அதிமுகவையோ அவர்களால் கைப்பற்ற முடியாது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவின் தலைமையில் ஜெ.அ.தி.மு.க தொடங்க அதிமுகவினர் தயாராக உள்ளனர் என்றும் அவர் கூறியிருப்பது கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.