கருணாநிதி உடல்நிலை - திமுக தலைமை திடீர் அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 12:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
கருணாநிதி உடல்நிலை - திமுக தலைமை திடீர் அறிவிப்பு

சுருக்கம்

திமுக தலைவர் உடல் நிலையை முன்னிட்டு அவருக்கு மேலும் சில நாள் ஓய்வு தேவைப்படுவதால் யாரும் அவரை காண வரவேண்டாம் என திமுக தலைமை கூறியுள்ளது. 

இது குறித்த திமுக தலைமையின் அறிக்கை:  

தலைவர் கலைஞர் அவர்கள் சென்னை காவேரி மருத்துவ மனை யில்  கடந்த சில நாட்களாகச் சிகிச்சை பெற்று,  நேற்றையதினம்  (7-12-2016) இல்லம் திரும்பியுள்ள போதிலும்,   தலைவர் கலைஞர் அவர்கள்  மேலும் சில நாட்களுக்கு  ஓய்வெடுத்துக் கொள்ள  வேண்டு மென்றும், அதுவரை

“நோய்த்தொற்று”க்கு ஆளாகாமல் மிகவும் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டுமென்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

எனவே தலைவர் கலைஞர் அவர்களைப் பார்க்க நேரில் வருவதைத் தவிர்த்து  கழகத் தோழர்களும், நண்பர்களும் முழுமையாகவும், கண்டிப்பாகவும்  ஒத்துழைக்க வேண்டுமென்று  அன்புகூர்ந்து  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!