ராமதாஸ கூட்டணிக்கு கொண்டு வந்த கேபி முனுசாமியை நீக்கு.... கிருஷ்ணகிரி அதிமுகவை ரவுண்டடிக்கும் வாட்ஸ் அப் மெஸேஜ்!!

By sathish kFirst Published May 24, 2019, 3:09 PM IST
Highlights

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு பாமகவிற்கு மரண அடியை கொடுத்திருக்கிறார்கள் தர்மபுரி மாவட்ட மக்கள். பா.ம.க வானது அ.தி.மு.கவோடு கூட்டணி சேர்ந்து 7 இடங்களில் போட்டியிட்டது. இதில் முக்கிய தொகுதியாக பார்க்கப்படுவது அன்புமணி போட்டியிட்ட தர்மபுரிதான். அன்புமணி வெற்றிக்காக பல கூட்டணி கட்சி தலைவர்களான ஓபிஎஸ் இபிஎஸ் என தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். 

வன்னியர் ஓட்டுகள் தர்மபுரி தொகுதியில் அதிகம் என்பதால் அன்புமணி இத்தொகுதியில் மீண்டும் ஜெயிப்பார் என சொன்னதால் போட்டியிட்டார் ஆனால், திமுகவிடம் படுதோல்வியை சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் முன்னிலை வகித்த அன்புமணி தற்போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட செந்தில் குமாரை விட சுமார் 20000 வாக்குகள் பெற்று படுமோசமாக பின்னடைவில் உள்ளார்.

இந்நிலையில், நேற்றிலிருந்தே பாமகவை கூட்டணிக்கு சேர்த்தது தொடர்பாக அதிமுகவினர் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். அதிலும் கூட்டணியில் கேபி முனுசாமி தான் என வாட்ஸ் அப்பில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது.

அதில், "கிருஷ்ணகிரி தொகுதியில் தான் வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில்,தொண்டர்கள் எதிர்ப்பை மீறி அம்மாவை வார்த்தைக்கு வார்த்தை குற்றவாளி என அழைத்தும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர்களை டயர் நக்கி, மானங்கெட்ட அடிமை ன்னு ஏகத்துக்கும் விமர்சனம் செய்த, அம்மா நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்ட பாமக என்ற ஒரு ஜாதி வெறி கட்சிக்கு தகுதிக்கு மீறி 7 லோக்சபா சீட்டு மற்றும் 1 ராஜ்யசபா சீட் தருவதாக கூறி அழைத்து வந்து தானும் படுதோல்வி அடைந்து.

அதிமுக விற்கு பாதகமான சூழ்நிலை யை உருவாக்கிய திரு கேபி முனுசாமி அவர்களின் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கேட்டு கொள்கிறோம்" என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!