அரசியல் வாரிசுகளுக்கு அடித்த அதிர்ஷ்டமும்..! துரதிஷ்டமும்..! கலங்கி நிற்கும் முக்கிய புள்ளிகள்..!

By ezhil mozhiFirst Published May 24, 2019, 3:07 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலிலும் இடைத் தேர்தலிலும் பல்வேறு அரசியல் தலைவர்களின் வாரிசுகள் போட்டியிட்டு ஒரு சிலர் வெற்றி பெற்று உள்ளனர். 

அரசியல் வாரிசுகளுக்கு அடித்த அதிர்ஷ்டமும்..! துரதிஷ்டமும்..! 

நாடாளுமன்ற தேர்தலிலும் இடைத் தேர்தலிலும் பல்வேறு அரசியல் தலைவர்களின் வாரிசுகள் போட்டியிட்டு ஒரு சிலர் வெற்றி பெற்று உள்ளனர். ஒரு சிலர் படுதோல்வி அடைந்து உள்ளனர். அந்த வகையில் யாரெல்லாம் எங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தென்சென்னை தொகுதியில் அதிமுக சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் மகனான ஜெயவர்த்தன் போட்டியிட்டார். இதற்கு முன்னதாக அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தாலும் இந்த முறை தோல்வியை தழுவினார். இவருக்கு எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளரான தங்கச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றார். இவர் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று திருநெல்வேலி தொகுதியில் தோல்வி அடைந்த பிஎஸ் மனோஜ் பாண்டியன் முன்னாள் சபாநாயகர் பி எஸ் பாண்டியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று முன்னாள் மேயரும் எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பாவின் மகனான வி.வி.ஆர். ராஜ்சத்யன் மதுரை தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கினார்.ஆனால் தோல்வியை தழுவினார்.ஆனால் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் மற்றும் தேனி தொகுதி அதிமுக வேட்பாளரான ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

வடசென்னை தொகுதி திமுக வேட்பாளரான வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் கௌதம் சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி  பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!